IQOO Smartphone (Photo Credit: Twitter

அக்டோபர் 10, சென்னை (Technology News): விழாக்கால கொண்டாட்டமாக தற்போது ஐக்யூஒஒ நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பான ஐ க்யூ ஒ ஒ மற்றும் ப்ரோ மாடல் எடிஷன்கள் விரைவில் இந்திய சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தற்போது இந்த ஸ்மார்ட் ஃபோனில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து பல்வேறு தகவல்களும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், ஸ்மார்ட் போன் ரூபாய் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரையிலும், 12 ப்ரோ 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரையிலும் சந்தையில் விற்பனை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

டெலிபோட்டோ லென்ஸ், 16GB RAM மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதியும் வழங்கப்படுகிறது‌. ஸ்னாப்டிராகன் 8 gen 2 processor, 2k (1440x3200) டிஸ்பிளே, 144HZ E6 Amoled ஸ்கிரீன் அம்சமும் இருக்கிறது‌.

50 எம்பி 8 எம்பி 13 எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி திறன், 120w சார்ஜரும் வழங்கப்படுகிறது‌. அதேபோல், 2k resolution-ல் இருந்து 1.5 k, 512 ஜிபி - 1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 16 ஜிபி - 24 ஜிபி ரேம், telephoto lens 3x zoom திறனும் உள்ளது‌.