டிசம்பர் 28, இஸ்ரேல்: ஏறத்தாழ 40 கோடி பயனர்களின் ட்விட்டர் கணக்குகள் திருடப்பட்டு (Twitter Accounts Hacked) விற்பனைக்கு உள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோ நகரில் தலைமையகத்தை கொண்ட ட்விட்டர் (Twitter) நிறுவனம், இன்று உலகளவில் 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் பலகோடி மில்லியன் பயனர்களை பெற்று இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக ட்விட்டர் நிறுவனத்தின் வளர்ச்சியானது அசுரத்தனமாக இருந்தது.
அதனைத்தொடர்ந்து, சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கி தன்வசப்படுத்தினார். அவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதும் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், பல ஊழியர்களும் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர். BF7 Corona Variant: உருமாறிய கொரோனா வேகத்தில் பரவும்; மக்களே கவனம் – அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை..!
தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த விஷயங்களில் திருட்டுத்தனம் என்பது எப்போதும் இருக்கும். அதேபோல, நமது செயல்பாடுகளை உளவு வைத்து கண்காணிக்க ஹேக்கர்கள் செயல்பட்டு கொண்டு இருப்பது உலகறிந்த உண்மை. இந்த நிலையில், 40 கோடி ட்விட்டர் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக பகீர் தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உட்பட பலரின் ட்விட்டர் தரவுகள் திருடப்பட்டு, அவர்களின் தனிப்பட்ட விபரங்கள் அடங்கிய தொகுப்பு விற்பனைக்கு தயார் நிலையில் இருக்கிறது என இஸ்ரேலிய உளவு அமைப்பு கண்டறிந்துள்ளது. ட்விட்டர் தரவுகள் ஹேக்கரால் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்துள்ள நிறுவனம், முக்கிய நபர்கள் உட்பட 40 கோடி பயனர்களின் தகவல் திருடப்பட்டுள்ளது என்பதையும் உறுதி செய்துள்ளது.