
ஜூன் 27, சென்னை (Technology News): சர்வதேச அளவில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் பெரிய அளவில் பணியாளர்களை நீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் வாரங்களில் இருந்து இது தொடர்பான பணி நீக்க அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். நிறுவனத்தின் மறுசீரமைப்பு தொடர்பான முடிவு எடுக்கப்பட்டு பணி நீக்கங்கள் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. Instagram Reels: ரீல்ஸ் அதிகம் பார்க்குறீங்களா?.. இன்ஸ்டா பிரியர்களுக்கு பேராபத்து.!
மைக்ரோசாப்ட் பணிநீக்கம் :
சமீபத்தில் மைக்ரோசாப்ட் 69 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆக்டிவிஷன் பிலிசார்ட் கைப்பற்றியது. இதனால் அதன் லாபத்தை அதிகரிக்க வேண்டி புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளதால் எக்ஸ்பாக்ஸ் பிரிவில் உள்ள ஊழியர்கள் பணிநீக்கத்தை எதிர்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட்டின் இந்த செயல் காரணமாக பிற நிறுவனங்களிலும் சுமார் 3000 பேர் வரை பணிநீக்கங்களை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மே மாதத்தில் மட்டும் மைக்ரோசாப்ட் தனது கேமிங் உட்பட பிற நிறுவனங்களில் பணியாற்றி வரும் 6,000 ஊழியர்களை பணி நீக்க செய்த நிலையில், தற்போது அடுத்த கட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.