Samsung Galaxy M14 5G (Photo Credit: Amazon.com)

ஏப்ரல் 19, புதுடெல்லி (Technology News): தென்கொரிய செல்போன் நிறுவனமான சேம்சங் (Samsung), உலக சந்தைகளில் உற்றுநோக்கப்படும் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் செல்போன்களின் (Samsung Smartphones) தரம் இன்று வரை நிரந்தரமாக இருப்பதால் பலராலும் வாங்கப்படுகிறது.

அதே வேளையில், சாம்சங் நிறுவனத்தின் எம் சீரிசுகள் (Samsung M Series Mobiles) அறிமுகம் செய்யப்பட்டபோதில் இருந்து இன்று வரை எதிர்மறை விமர்சனங்களும் அவ்வப்போது வருகின்றன. தற்போது சேம்சங் நிறுவனம் தனது M14 (Samsung Galaxy M14 5G) ரக செல்போனின் புதிய அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது.

அட்டகாசமான கேமரா குவாலிட்டியுடன் களமிறக்கப்பட்டுள்ள Samsung Galaxy M14 ரக செல்போன் Icy Silver, Smoke Teal மற்றும் Berry Blue நிறங்களில் களமிறங்கியுள்ளது. 4GB ரேம் 128 GB ரோம் என்ற முறையில் இந்திய சந்தையில் ரூ.13,490 க்கு விற்பனை செய்யப்படுகிறது. Viluppuram Murder: தாத்தா-பாட்டிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த பேரன்.. தந்தைக்கு அதிர்ச்சி செய்தி சொல்லிய 19 வயது மகன்.!

அதேபோல 6GB ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.14,990 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை அமேசான் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் விற்பனைத்தளங்களில் ஏப்ரல் 21ம் தேதி தொடங்குகிறது. 6.6-inch FHD+ LCD டிஸ்பிளெ, 90Hz Refresh Rate, Exynos 1330 chipset அமைப்பு, Android 13 OS ஆகியவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.

:

அதேபோல, 50 எம்.பி + 2 எம்.பி + 2 எம்.பி பிரைமரி கேமரா, செல்பிக்காக 13 எம்.பி கேமரா கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 6,000 mAh திறனுடன், 25 W சார்சர் சப்போர்ட்டன் விற்பனை செய்யப்படுகிறது. சார்ஜிங் கேபிள் நாம் தனியாக வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.