மார்ச் 14, புதுடெல்லி (New Delhi): வளர்ந்து வரும் முக்கிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது அபரீதமான வகையில் மனித ஆற்றலை முன்னேற்றப்பாதையில் அழைத்து சென்றுகொண்டு இருக்கிறது. ஆனால், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தும் நபர்கள், தொடர்ந்து அவதூறு மற்றும் ஆபாசமான செயல்களை கையில் எடுத்து சமூகத்தை சீரழித்து வருகின்றனர். அவ்வப்போது இவ்வாறான கும்பலின் தொழில்நுட்ப கைவரிசையை அரசும் அதே தொழில்நுட்பம் கொண்டு அடக்கி வருகிறது.
ஆபாச உள்ளடக்கம் வெளியிட்ட பக்கங்கள் முடக்குவதாக அறிவிப்பு: இதனிடையே, தற்போது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு (Ministry of Information & Broadcasting) அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு எச்சரிக்கைகளுக்குப் பின்னும் ஆபாசமான மற்றும் மோசமான உள்ளடக்கத்தை வெளியிட்டு வந்த 19 இணையதளங்கள், 10 செயலிகள், 57 சமூக வலைதள பக்கங்கள் (Social Media) மற்றும் ஓடிடி தளங்கள் (OTT Platforms Banned) ஆகியவை மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. One 97 Communications Layoffs: பணி நீக்கம் செய்யப்போகும் பேடிஎம்மின் தாய் நிறுவனம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
அதிரடி காண்பித்த மத்திய அரசு: இந்திய அரசியலமைப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் பெண்கள் பாதுகாப்பு உட்பட சட்ட விதிகளின் கீழ் இந்த தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, முகநூல் பக்கத்தில் 12 கணக்குகள், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 கணக்குகள், எக்சில் (ட்விட்டர்) 16 கணக்குகள், யூடியூபில் 12 கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஓடிடி தளங்களை பொறுத்தமட்டில் கீழ்காணும் செயலிகள் முடக்கப்பட்டுள்ளது.
முடக்கப்பட்ட ஓடிடி தளங்களின் விபரம்: அவையாவது, டிரீம் பிலிம்ஸ் (Dreams Films ), வூவி (Voovi), யெஸ்மா (Yessma), அன்கட் ஆடா (Uncut Adda), ட்ரை ஃபிளிக்ஸ் (Tri Flicks), எக்ஸ் பிரைம் (X Prime), நியான் எக்ஸ் (Neon X), விஐபி பேஷரம்ஸ் (VIP Besharams), ஹன்டர்ஸ் (Hunters), ரேபிட் எக்ஸ்ட்ராமூட் (Rabbit Xtramood), நியூஃப்லிக்ஸ் (Xtramood), மூட்எக்ஸ் (MoodX), மொஜிப்பிலிஸ் (Mojflix), ஹாட் ஷாட்ஸ் விஐபி (Hot Shots VIP), ஃபியூகி (Fugi), சிகூஃப்லிக்ஸ் (Chikooflix), பிரைம் ப்ளே (Prime Play).