மார்ச் 14, புதுடெல்லி (New Delhi): இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) விதிமுறைகளை மீறி செயல்பட்ட பேடிஎம் நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் அதிரடி உத்தரவுகள் கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் சமீபத்தில் பேடிஎம் கணக்கு வாயிலாக சுங்கச்சாவடியில் பணம் செலுத்துவோர், வேறு வங்கிகளுக்கு கணக்குகளை மாற்ற அறிவுறுத்தி இருந்தது.
20% ஊழியர்கள் பணிநீக்கம்: இதனால் தொடர்ந்து பேடிஎம் நிறுவனம் அடுத்தடுத்த பிரச்சனைகளை எதிர்கொண்டு, அதில் இருந்து மீண்டு வர போராடி வந்தது. இன்று தனது பணியாளர்களில் 20% நபர்களை பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வீட்டிற்கும் அனுப்பி வைத்தது. தொடர்ந்து, பேடிஎம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருந்த யுபிஐ பரிவர்த்தனைகள் அனுமதி கெடுவும் நிறைவுறும் தருவாயில் இருந்தது. TN Weather Report: தமிழகத்தில் அடுத்த வாரம் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்..!
பேடிஎம் நிறுவனத்திற்கு அனுமதி: இந்நிலையில், இந்திய தேசிய இணையவழி பரிவர்த்தனை (National Payments Corporation of India NPCI) கட்டுப்பாட்டு கழகம், பேடிஎம்-மின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் (One 97 Communications) நிறுவனத்திற்கு ஆன்லைன் பணபரிவர்த்தனைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் வாயிலாக பேடிஎம் பயனர்கள் மீண்டும் தங்களின் கணக்குகளில் இருந்து பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.
பயனர்களுக்கு தற்காலிக நிம்மதி: இந்த விஷயம் குறித்து என்பிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, பேடிஎம் நிறுவனத்தின் செயல்பாடுகள் அனைத்தும் இனி எஸ் பேங்க் (Yes Bank) நிறுவனத்திற்கு மாற்றி வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக பேடிஎம் கணக்குகளை இனி எஸ் பேங்க் நிர்வகிக்கும் என்பது தெரியவந்துள்ளது. மேலும், பேடிஎம் பயனர்கள் தங்களின் வழக்கமான பணப்பரிவர்த்தனைகள், தானியங்கு வகையில் பணம் செலுத்தும் அமைப்புகளை எப்போதும் போல் தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NPCI grants approval to One97 Communications Limited (OCL) to participate in UPI as a Third-Party Application Provider (TPAP) under multi-bank model.@dilipasbe
Read more here: https://t.co/XuJpyiiRNq
— NPCI (@NPCI_NPCI) March 14, 2024