OpenAI CEO Sam Altman (Photo Credit: Wikimedia Commons)

ஜூலை 23, புதுடெல்லி (Technology News): எலான் மஸ்க் உட்பட பல நிர்வாகிகளை கொண்ட Open AI நிறுவனத்தின் Chat GPT ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அடுத்த வாரம் முதல் அறிமுகம் செய்யப்படும் என OpenAI நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் அல்ட்மேன் (Sam Altman) தெரிவித்து இருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாட் ஜி.பி.டி எனப்படும் ஓபன் ஏஐ தொழில்நுட்பம் ஐஓஎஸ் போன்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டன. இதற்கிடையில் தான் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் மூலமாக செயலியை பயனர்கள் பெற்றுக்கொள்ளலாம். Trending Video: ஓடும் இரயிலில் ஏற முயற்சித்து, நூலிழையில் உயிர்தப்பிய பயணி; அதிர்ச்சியை தரும் பகீர் வீடியோ வைரல்.!

ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு செல்போன்களில் ஒரே மாதிரியாக செயல்படும் வகையில் சாட் ஜிடிபி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் தங்களின் வாய்மொழி உத்தரவின் மூலமாக தங்களுக்கு விருப்பப்பட்ட செயல்களை செயல்படுத்தலாம். அதேபோல, அமெரிக்காவில் ஆண்ட்ராய்டு பயனர்கள் முதலில் சாட் ஜிடிபி-ஐ உபயோகம் செய்வார்கள்.

அதனைத்தொடர்ந்து பிற நாடுகளுக்கு அவை அறிமுகம் செய்யப்படும். கூகுள் பிளே ஸ்டோரில் முன்னதாகவே பதிவு செய்துகொள்ளும் வசதியும் Open AI நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களின் உத்தரவுகளை எந்த நேரமும் புதுப்பிக்கவும், மாற்றம் சிலவும் முடியும்.