ஜனவரி 30, இலண்டன்: தங்களின் நிறுவன செயல்திறனை மேம்படுத்த 2023ம் ஆண்டுக்குள் 3 ஆயிரம் ஊழியர்களை நிறுத்த திட்டமிட்டுள்ள பிலிப்ஸ் நிறுவன, 2025க்குள் மொத்தமாக 6 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நிறுத்துவோம் என அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் பிலிப்ஸ் நிறுவனம் எதிர்கொண்ட பல்வேறு சவால்கள் காரணமாக 4 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக மேலும் கூடுதல் ஒத்துழைப்பை அளித்து, பிற பணியாளர்களை நீக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. G20 EdWG Meeting: ஜி20 கல்வி மாநாட்டுக்கு வருகை தந்தவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு – விழாக்கோலம் பூண்ட சென்னை விமான நிலையம்.!
MRI ஸ்கின், அல்ட்ராசவுண்ட் இயந்திரங்கள் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் பிலிப்ஸ் நிறுவனம், தனது 2021ம் நான்காவது காலாண்டில் 106 மில்லியன் யூரோ இழப்பை சந்தித்துள்ளது. அதற்கு முன்பு 157 மில்லியன் யூரோக்கள் லாபம் கொண்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.