Planet Parade (Photo Credit: @StarWalk X)

ஜூன் 03, புதுடெல்லி (New Delhi): வானியல் மர்மங்கள் என்பது விடைகள் இல்லாத பல கேள்விகளை கொண்டவை ஆகும். சூரியனை சுற்றி அதன் குடும்ப உறுப்பினராக இருக்கும் 9 கோள்கள் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றுவதைப்போல, பால்வழி அண்டத்தை போல பல பால்வழி அண்டங்கள் இயங்குகின்றன. அவ்வப்போது சூரியனை சுற்றும் கோள்கள் ஒரே நேர்கோட்டில் அல்லது அருகருகே சந்திப்பது உண்டு. Tractor Overturned: திருமண வீட்டார் பயணித்த டிராக்டர் கவிழ்ந்து சோகம்; 13 பேர் பலி., 30 பேர் படுகாயம்.!

அந்த வகையில், ஜூன் 03ம் தேதியான இன்று புதன், செவ்வாய், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கொண்டன. இந்த காட்சி ஆஸ்திரேலியா உட்பட சில நாடுகளில் இருந்து பார்ப்போருக்கு தெரிந்தது. வான்வெளி ஆராய்ச்சி மையங்களில் தொலைநோக்கி உதவி கொண்டும் அதனை மக்கள் கண்டுகளித்தனர். அதிகாலை நேரத்தில் இந்த காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறது. அவை உங்களின் பார்வைக்கும் இணைக்கப்பட்டுள்ளது.