
ஜூன் 04, சென்னை (Technology News): ரியல்மி நிறுவனம் தனது சி சீரிஸ்ல ரியல்மி சி71 (Realme C71 Smartphone) ஸ்மார்ட்போனை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி பல்வேறு ஸ்மார்ட் போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் ரியல்மி சி71 ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம். Indian Bank: இந்தியன் வங்கி வாடிக்கையாளரா நீங்கள்? .. இனி ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது கவனமா இருங்க.!
ரியல்மி சி71 சிறப்பம்சங்கள்:
- இதில், 6,300mAh பேட்டரியுடன், 45W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. மேலும், போன் மூலமா வேற போனை சார்ஜ் செய்யும் பொது 6W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
- ரியல்மி சி71 ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் AI சப்போர்ட்டுடு ரியர் கேமரா, செல்ஃபிக்கு 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனில் இது சிறந்த கேமரா அம்சம் ஆகும்.
- இந்த ஸ்மார்ட் போனில், ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான, Unisoc T7250 ஆக்டா-கோர் ப்ராசஸர் உள்ளது. 4GB மற்றும் 6GB RAM ஆப்ஷன்கள் உள்ளது. மேலும், 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உண்டு. மெமரி கார்டு வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
- இதில், 6.67 இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளே உள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 725 நிட்ஸ் ப்ரைட்னஸ், 7.79mm, 196 கிராம் எடையுடன், MIL-STD-810H மில்டரி கிரேடு சர்டிஃபிகேஷன் உடன் வந்துள்ளது. மேலும், IP64 ரேட்டிங் உடன் கொடுக்கப்பட்டுள்ளது.
ரியல்மி சி71 விலை:
ரியல்மி சி71 தற்போது பங்களாதேஷ், வியட்நாம் போன்ற சில நாடுகளில்தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பங்களாதேஷ்ல 4ஜிபி ராம் +128ஜிபி ரோம் மாடல் தோராயமா ரூ.10,000க்கும், 6ஜிபி ராம் மாடல் ரூ.12,000க்கும் வருகிறது. இந்தியாவில் அறிமுகம் ஆகும் போது, இதே விலை அல்லது இதைவிட கூடுதலான பட்ஜெட் விலையில வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.