Galaxy Ring | Samsung Logo (Photo Credit: Twitter / Wikipedia Commons)

ஜூலை 31, தொழில்நுட்பம் (Technology News): தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனம், சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. பல தொழில்நுட்ப மேம்பாடுகள் கொண்ட ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் தொடர்ந்து உலகத்திற்கு அறிமுகம் செய்து வருகிறது.

இந்நிறுவனம் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பிற எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட பொருட்களின் உற்பத்திக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் மோதிரம் ஒன்றை தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Kape Technologies Lay Off: 200 பணியாளர்களை அதிரடியாக நீக்கம் செய்தது கேப் டெக்னாலஜி; தலைமை தொழில்நுட்ப வல்லுநர் விருப்ப ஓய்வு.! 

இந்த ஸ்மார்ட் மோதிரம் Galaxy Ring என்று அழைக்கப்படுகிறது. இந்த மோதிரம் இந்த ஆண்டுக்குள் விரைவில் சந்தையில் வெளியாகும் என கூறப்படுகிறது. கேலக்சி ரிங் நாமத்த்து உடல் மற்றும் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Samsung's Galaxy Ring (Photo Credit: Twitter)

அதன் தனித்தன்மை கொண்ட சென்சார்கள் நமது உடலநலத்தை கண்காணித்து, நாம் அதனை இணைத்து வைத்துள்ள ஸ்மார்ட்போனில் அவற்றின் தகவலை பரிமாறும். இந்த மோதிரம் தனிப்பட்ட நபரின் விரலுக்கு ஏற்ப சந்தைகளில் விற்பனை செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட் வாட்ச் முயற்சியில் வெற்றிகண்டுள்ள நிலையில், அது பல உயிர்களையும் காப்பாற்றி இருக்கிறது. இந்த நிலையில் தான் சாம்சங் நிறுவனமும் போட்டியாக ஸ்மார்ட் வாட்சையே தயாரிக்காமல், ஸ்மார்ட் மோதிரத்தை தயாரித்து இருக்கிறது.