ஜனவரி 15, லாஸ் வேகாஸ் (Technology News): 'டிக்டாக்' செயலி (TikTok) இசை, நடனம், நடிப்பு உள்ளிட்ட திறமைகளை வெளிக்காட்டும் களமாக இருப்பதால், வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர். சீனாவை சேர்ந்த, 'பைட்டான்ஸ்' என்ற நிறுவனம் இந்த செயலியை உருவாக்கி உலகம் முழுதும் நிர்வகித்து வருகிறது. இந்த செயலிக்கு இந்திய அரசு தடை விதித்தது. தொடர்ந்து இந்த செயலிக்கு அமெரிக்க அரசு சமீபத்தில் தடை விதித்தது. Farmers Shot Dead: 40 விவசாயிகள் சுட்டுக் கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!
அமெரிக்காவில் 'டிக்டாக்' செயலிக்கு தடை:
அமெரிக்காவில், 17 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக 'டிக்டாக்' செயலிக்கு அமெரிக்க அரசு சமீபத்தில் தடை விதித்தது. இதை எதிர்த்து, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் டிக்டாக் வழக்கு தொடர்ந்துள்ளது. ஆனாலும் அமெரிக்க நிதீமன்றம் பைட் டான்ஸ் நிறுவனத்திடமிருந்து டிக்டாக் அமெரிக்க செயல்பாடுகளை விற்பனை செய்யவும் ஜனவரி 19 ஆம் தேதிக்குள் இந்த விற்பனை நடக்க வேண்டும் என்றும் அமெரிக்க அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்கு டிக்டாக் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளையில் டிக்டாக் - எலான் மஸ்க்-ன் எக்ஸ் தளத்திற்கு விற்பனை செய்யப்படும் என்ற தகவல்கள் பரவலாக பேசப்பட்டு வந்தது. அவர், டிக்டாக் சமூக வலைதளத்தை வாங்க இருப்பதாக, புளூம்பெர்க் நிறுவனம் பரபரப்பு செய்தியை வெளியிட்டது. இது குறித்து டிக்டாக் நிறுவனம் மறுப்பை தெரிவித்துள்ளது.