ஆகஸ்ட் 13, சான் ஜோஸ் (Technology News): அமெரிக்காவில் நவம்பர் 2024-ல் நடைபெறவுள்ள தேர்தலில் புதிய அதிபரை மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர். இன்னும் சில மாதங்களே இருப்பதால் அமெரிக்காவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முதலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட ஜோ பைடன், பின் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார். மறுபக்கம் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) போட்டியிடுகிறார்.
நேர்காணல்: டொனால்டு டிரம்பிற்கு உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) ஆதரவு தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில், தனது எக்ஸ் தளத்தில் டொனால்டு டிரம்பை நேர்காணல் செய்ய இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார். இந்த நேர்காணல் ஸ்கிரிப்ட் எதுவும் இல்லாமல் இருக்கும் எனவும் பயனர்கள் எந்த கேள்வியையும் கேட்கலாம் எனக் கூறியிருந்தார். இந்த நேர்காணல் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. CrowdStrike Accepts 'Most Epic Fail' Award: "மிகப்பெரிய தோல்வி" விருதினைப் பெற்ற க்ரௌட் ஸ்ட்ரைக்.. காரணம் என்ன?!
DDOS தாக்குதல்: ஆனால், யூசர்கள் ஸ்பேசில் இணைவதில் சிக்கல் ஏற்பட்டது. DDOS எனப்படும் சைபர் அட்டாக் (DDoS Attack) நடைபெற்று இருப்பதாக எலான் மஸ்க் குற்றம் சாட்டினார். இண்டெர்னெட் டிராபிக் வழியாக சர்வரில் மொத்தமாக புகுந்து பிற யூசர்களை இணையவிடாமல் முடக்கும் ஒருவகையிலான சைபர் தாக்குதல் என்று சொல்லப்படுகிறது. இதனால், குறைவான யூசர்கள் இணைந்த நிலையில் 45 நிமிடம் கழித்து இந்த பேட்டி தொடங்கியது.
— Elon Musk (@elonmusk) August 13, 2024