மே 15, புதுடெல்லி (New Delhi): கடந்த 2004ம் ஆண்டு தனது நண்பர்களுக்கு இடையே உரையாட தொடங்கப்பட்ட பேஸ்புக் (Facebook), பின்னாளில் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டு, இன்று தவிர்க்க முடியாத சமூக வலைதள செயல்களில் ஒன்றாக இருக்கிறது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், திரெட்ஸ், வாட்சப் போன்றவற்றை மெட்டா நிறுவனம் தற்போது ஒருங்கிணைந்த சேவையாக வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக மார்க் ஸுக்கம்பர்க் பணியாற்றி வருகிறார். Eye Brow: கர்ப்பப்பையை பலவீனப்படுத்தும் ஐ-ப்ரோ அழகு சிகிச்சை; மருத்துவர் கூறிய பரபரப்பு தகவல்.! பெண்களே உஷார்.!
தொழில்நுட்பக்கோளாறுகள்: அவ்வப்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் தொழில்நுட்ப கோளாறினை எதிர்கொண்டு வருகிறது. சர்வதேச அளவில் பல செயலிகள் மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயல்கள் பிரதானமாக பயன்படுகிறது. இதனால் அவை தொழில்நுட்ப கோளாறை எதிர்கொள்ளும்போது பயனர்கள் தங்களின் தகவலை பகிர இயலாமல் அவதிப்படுகின்றனர். ஒருசில நேரம் பிறரின் இடுகைகளையும் பார்க்க இயலாது.
முடங்கிப்போன பேஸ்புக்: இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் இருந்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் உலகளவில் திடீரென முடங்கிப்போயுள்ளன. இதனால் அவதிப்பட்ட பயனர்கள் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தொழில்நுட்ப கோளாறினை சரி செய்ய தொழில்நுட்ப குழுவினர் முயன்று வருவதாக மெட்டா நிறுவனத்தின் தரப்பில் தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.
முகநூல், இன்ஸ்டாகிராம் முடங்கியதால் ட்விட்டருக்கு பலரும் வருவதை கலாய்த்த பதிவர்:
Everyone rushing to Twitter/X to see if Facebook/Instagram is down.
— AZ Intel | Personal (@Andreaz_Intel) May 15, 2024