Cow (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 13, புதுடெல்லி (Technology News): செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகளுக்கு அருகிலிருக்கும் மருத்துவர்களை முன்பதிவு செய்யவும், வீட்டிலிருந்தே கால்நடைகளுக்கு காணொலி வாயிலாக முதலுதவி செய்யவும் தமிழக அரசு ‘கால்நடை மருத்துவர்’ என்ற செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலி மூலம் போலி கால்நடை மருத்துவர்களை தவிர்த்து, மருந்துகளின் பயன்பாட்டை கண்டறிந்து சுலபமாக மருத்துவரை அணுகலாம். Rental Agreement: வீட்டு வாடகை ஒப்பந்தம் போடுவது ஏன்? கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.!

கால்நடை மருத்துவர்:

இந்த செயலி முழுவதும் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளிலும் அனைவரும் எளிமையாக பயன்படுத்தும் விதத்தில் உள்ளது. மேலும் இந்த செயலியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ கவுன்சிலில் 3,654 மேல் பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் உள்ளனர். இந்த செயலியில் கால்நடை மற்றும் செல்லபிராணி என்ற பிரிவுகளில் சென்று நமக்கு அருகில் இருக்கும் மருத்துவர்களை தெரிந்து கொண்டு தொடர்பு கொள்ளலாம். கால்நடை பிரிவில் பசு,எருமை, ஆடு, கோழி, குதிரை என்றும் செல்லப்பிராணி பிரிவில் பூனை, நாய், பறவைகள், மற்ற விலங்குகளுக்கும் என தனித்தனியாக சேவைகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் சென்றால் மருத்துவர்களின் பெயரும் அவர்களின் அழைபேசி எண் மற்றும் முகவரியும் வரைபடத்துடன் அளிக்கிறது. மேலும் இதில் கால்நடை தொழில் முனைவோர்களுக்கு பண்ணை அமைப்பதற்கான ஆலோசனைக்கும், பொருளாதார மற்றும் விரிவாக்க அறிவுரை வழங்குவதற்கும் ஆலோசகர்களையும் தொடர்பு கொள்ள முடியும்.

கால்நடை மருத்துவர் செயலி மூலம் கால்நடை வளர்ப்பு மற்றும் பாரமரிப்பு முறைகள், பண்ணை உயிர் பாதுகாப்பு முறைகள், தீவன மேலாண்மை என அனைத்தையும் விளக்கங்களுடன் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் அரசு வெளியிடும் அரசாணைகள், அறிவிப்புகள் மற்றும் ‘கால்நடை மருத்துவர்’ மாத இதழ்களும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.