மே 04, புதுடெல்லி (New Delhi): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார்க்கை சேர்ந்த மல்யுத்த வீரர்களின் குடும்பத்தில் மகளாக பிறந்த பானு, 1900ம் ஆண்டின் முற்பகுதியை சேர்ந்தவர். இவர் வீட்டில் தனது குடும்பத்தினருடன் மல்யுத்தம் பழகி, கடந்த 1940 மற்றும் 1950ம் ஆண்டுக்குள், 300 க்கும் அதிகமான போட்டிகளில் கலந்துகொண்டு மாபெரும் சாதனைகளை பெற்று வெற்றியை சந்தித்தார்.

என்னை அடக்குபவனுக்கே நான் அடங்குவேன் என முழக்கம்: அங்குள்ள நபர்களின் பல பேச்சுக்கள், பெண்களுக்கு எதிரான வன்மம் என பல விஷயங்களை கடந்து அவர் ஆண்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றியை அடைந்தார். தன்னை தோற்கடிக்கும் நபருக்கு நான் கழுத்தை நீட்டுகிறேன் என்று கூறி மல்யுத்த போட்டிகளில் களமிறங்கும் பெண்மணி அசத்தல் வெற்றியை அடைந்தார். பின் சர்வதேச அரங்கிலும் தன்னை போட்டியில் ஈடுபடுத்திய ஹமிதா, ரஷிய பெண் மல்யுத்த வீரர் வேரா சிஸ்டத்தினை 2 நிமிடத்திற்குள் தோற்கடித்து சாதனை படைத்தார். Youth Trapped In Concrete Mixing Machine Dies: அசாம் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் கொலை; தமிழக வாலிபர் கைது..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..! 

முதல் பெண் மல்யுத்த வீராங்கனையை சிறப்பித்த கூகுள்: அன்றைய நாளில் அவரின் பெயர் செய்திகளில் அச்சடித்து வெளியிடப்பட, அலிகாரின் அமேசான் என்றும் இவர் போற்றப்பட்டார். அவரின் போட்டித்திறன், உணவுமுறை, பயிற்சிமுறை போன்றவையும் விவாதத்திற்குள்ளாக்கப்பட்டன. தான் வாழ்ந்த காலத்தில் முன்னோடியாக இருந்த பானு, அவரது அச்சமில்லாத உணவை இந்தியாவுக்காக அன்றைய நாட்களில் வெளிக்கொணர்ந்தார். இதனை சிறப்பிக்கும் பொருட்டு கூகுள் தற்போது டூடுல் வெளியிட்டு இருக்கிறது.