
மார்ச் 05, சென்னை (Technology News): நம்மில் யாரும் கடன்களை வேண்டுமென்றே வாங்கி செலவு செய்ய மாட்டார்கள். ஆனால் அளவுக்கு மீறிய கடன் வாங்குகிறோம் என பலருக்கும் தெரிவதில்லை. தொடர்ந்து அவசியமற்ற கடன்களை வாங்கி அதை சரியான நேரத்தில் கட்டாமல் விட்டால் பெரிய கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் நிலை உண்டாகும். தேவை இல்லாமல் வாங்கும் கடன்கள் ஒரு கட்டத்தில் ஒருவரின் சேமிப்பு, முதலீடு, சொத்துக்களுடன் சேர்த்து வாழ்வில் மகிழ்ச்சி, நிம்மதி அனைத்தையுமே பறித்துவிடும்.
மொத்த கடன் தொகையை கணக்கிடவும்:
ஒருவருக்கு ஒரே நேரத்தில் வீட்டுப்பொருட்களுக்கான இஎம்ஐ, வாகனத்திற்கான இஎம்ஐ, வீட்டுக்கடன் போன்ற பல கடன்கள் இருக்கும். இவைகளுக்கான தவணையை கட்டுவதற்கான நாட்களை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான தொகையை சரியான நேரத்தில் வங்கிகளில் செலுத்தி வைக்க வேண்டும். தவணைகள் கட்டும் தொகையையும், தேதியையும் மறக்ககூடாது. அவ்வப்போது குறித்து வைத்துக் கொண்டே வர வேண்டும். வீட்டு பட்ஜெட் போடுகையில் இதனையும் சேர்த்துக் கொண்டு, டைரி மெயிண்டைன் செய்ய வேண்டும்.
முதலில் அடைக்க வேண்டிய கடன்கள்:
அதிக வட்டியிலான கடன்களை முதலில் அடைக்க வேண்டும். கிரெடிட் கார்டு கடன்கள் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி முறையே 36% - 40% மற்றும் 14% - 22 சதவிகிதமாக உள்ளன. இந்தக் கடன்களை அடைப்பதன் மூலம் வட்டிக்கான தொகையில் சற்று குறைக்கலாம். மேலும் வெளியில் வாங்கியிருக்கும் கடன்களில் அதிக வட்டி இருந்தால் அதையும் சற்று வேகமாக அடைக்கலாம். வீட்டுப்பொருட்கான கடன், அதிக வட்டியாகத் தெரிந்தால் அதை தவிர்த்து விடுவது நல்லது. கடன்களுக்கானத் தொகை சம்பளப்பணத்தில் 30 முதல் 40 சதவீதத்திற்கு மேல் தாண்டாமல் பார்த்துக்கொள்வது அவசியம். Ecohouse: இயற்கைக்கு ஏற்ப வீடு இருக்கட்டும்.. மறுசுழற்சி வீடுகள்..!
சரியான நேரத்தில் தவணை செலுத்தவேண்டும்:
தவணைகளை உரிய தேதியில் செலுத்தவேண்டும். தவணை சரியாக செலுத்தவில்லையெனில் அதற்கு அபராதம், வட்டிக்கு வட்டி என அதிகமாகி பெரும் நிதி நெருக்கடியில் சிக்க நேரிடும். மேலும் தாமதமாக கட்டுவதால் இஎம்ஐ-களில் வாங்கும் பொருட்களுக்கு அடுத்து முறை வழங்கும் சலுகைகள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. மேலும் கிரெடிட் கார்ட் ஸ்கோரை தொடர்ந்து பராமரித்து குறைந்த வட்டிக்கு கடன்களை அடுத்த முறை பெறலாம்.
பாதுகாப்பான குறைவான கடன்:
எப்போதும் வாங்கும் கடன்களின் அளவு குறைவாகவே இருக்கட்டும். இதனால் கடனாளியாக வாய்ப்பே இல்லை. குறைவான தொகைகளை விரைவிலேயே அடைத்தும் விடலாம். மேலும் ஒரே நேரத்தில் பல கடன்களை வாங்க கூடாது. சம்பளம் முழுவதும் கடன்களின் வட்டிக்கு செல்லும் படியில் கடனை வாங்ககூடாது. அது மாதமாதம் குடும்பத்தையே நிதி நெருக்கடியிலே வைத்துவிடும்.
சம்பளப்பணத்தில் பிராவிடன்ட் ஃபண்ட், மருத்துவக் காப்பீடு, வருமான வரிப் பிடித்தம், பள்ளிக்கட்டணம், வீட்டு வாடகை மற்றும் செலவுகள், அனைத்தும் போக 35% இருக்கும் பட்சத்தில் அதற்குள்ள தொகைக்கு மட்டும் கடன்கள் வாங்கினால் கடனில் சிக்க முடியாது.
முதலீட்டைப் பயன்படுத்தவும்:
சூழ்நிலை காரணமாக கடன்களுக்கான தொகையை அடைக்க முடியவில்லை எனில் வேறுபக்கம் மற்றொரு கடனை வாங்கி இதை அடைக்க கூடாது. மிக நெருக்கமான சூழநிலை ஏற்பட்டால் முதலீடுகளிலிருந்து எடுத்து கடன் முழுவதையும் அடைத்து விடுவது நல்லது. முதலீடுகள் செய்வதே அவசர நிதி நெருக்கடிகளுக்காக தான் என்பது நினாஇவிருக்கட்டும் கடன் அடைக்க மற்றொரு கடன்வாங்கினல் அது எளிதில் கடன் வலையில் சிக்க வைத்துவிடும்.
வேண்டாம் அனாவசியக் கடன்:
தற்போது கடன்கள் வாங்க தேவையில்லை என்பதற்கான புதிதாக கடனை வாங்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. எதிர்காலத்தில் கடன்கலை சமாளிக்க திட்டம் தீட்டி எடுத்து வைக்கலாம். உதாரணமாக பண்டிகளுக்கு சேமித்து வைக்காலம். இது பண்டிகை காலங்களில் ஏற்படும் நிதி பாஅர்த்தைக் குறைக்கும். மேலும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடும் செய்து வைக்கலாம். இது அதிக வட்டிக்கு கடன் வாங்கினால் சமாளிப்பதற்கு கைகொடுக்கும்.நிதி பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும். அவசியமற்ற கடன்களைத் தவிர்ப்பது மிக அவசியமான ஒன்றாகும்.
காப்பீடு எடுப்பது கடனிலிருந்து காக்கும்:
அதிக தொகைக்கு கடன்களை வாங்குவதற்கு முக்கிய காரணம் மருத்துவ செலவுகளும், பள்ளி கல்லூரிக் கட்டணங்களும், பண்டிகை விழாக்களுமே. இவைகளை சமாளிக்கும் அளவிற்கு நம்மிடம் தொகை இருந்தால் பெரிய கடன்கள் வாங்க வேண்டிய அவசியமே இல்லை. இதற்காகத் தான் காப்பீடுகளும், முதலீடுகள், சேமிப்பும் அவசியம் என்பர். ஆயுள் காப்பீடு, குடும்பத்தில் உள்ளவருக்கு தனித்தனியாக மருத்துவக் காப்பீடு போன்றவைகள் பெரிய செலவுகளில் இருந்தும் கடன்களிலிருந்தும் பாதுகாக்கும் அரணாக விளங்குகின்றன. சிறிது சிறிதாக சேமித்து வைப்பதே கடன்களை நம்மிடம் நெருங்கவிடாது. மேலும் விபத்துக்காப்பீடு, சம்பளக் காப்பீடு போன்றவைகள் வேலையிழப்பின் போதும் பணிக்கு செல்ல முடியாத சூழ்நிலைகளிலும் இவைகள் நிதிநெருக்கடியைத் தடுக்கும். தங்களால் திருப்பி செலுத்த முடிந்த அளவிற்கு கடன்களை வாங்கினால் கடன்களும் நல்லதே.
கடனை அடைக்க மற்றொரு கடன்:
ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்குவது எப்போதும் ஒரு சிறந்த தேர்வாக இருக்காது. இருந்தாலும், ஒரு பெரிய அளவுடைய கடனை அடைக்க சிறிய அல்லது குறைந்த வட்டியுடைய தொகையை கடனாக வாங்கி அடைகலாம். ஆனால் அதை வட்டி அடைப்பதற்காக இருக்கக்கூடாது. அசல் கடனை அடைக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதற்காக குறைந்த வட்டியுடைய கடன்கள், லோன்கள், நகைக் கடன்கள் போன்றவற்றை வாங்கலாம். கடன்கள் இல்லாமல் இருப்பது தான் வாழ்க்கையை அமைதியாக வாழ உதவும்.
பட்ஜெட்டில் கடனுக்கு தனி இடம்:
கடன்கள் வங்கினால் உங்கள் கடன்களில் கவனத்தை செலுத்துவதை போலவே உங்கள் பட்ஜெட்டிலும் செலவிலும் கவனத்தை செலுத்த வேண்டும். செலவுகளைக் குறைத்து அதை கடன்களுக்கான சேமிப்பில் சேர்க்க வேண்டும். வீட்டு பட்ஜெட்டிம் செலவையும் சேமிப்பையும் சேர்ப்பது போன்று கடனுக்கென்று தனியான சேமிப்பையும் பின்பற்ற வேண்டும். செலவுகளை கண்காணித்து அதைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.
தொல்லையில்லா அரசு லோன்கள்:
வீட்டு லோன், கல்விக்கடன், சுயதொழில் கடன்கள் போன்ர அரசும் வங்கிகளும் அளிக்கும் கடனகளை வாங்கிப் பயன் பெறலாம். இதில் பிற்காலத்தில் அதிக கடன் சுமையைக் குறைக்கும். தனியாரிடமோ அல்லது வெளியில் வட்டிக்கு வாங்கும் கடன்கள் எளிதில் அடைக்க முடியவில்லை என்றால் பிற்காலத்தில் நிதி நெருக்கடியில் சிக்க வைத்துவிடும்.