ஏப்ரல் 08, புதுடெல்லி (New Delhi): சூரிய கிரகணம் என்பது பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் நிலவு பயணிக்கும் நிகழ்வு ஆகும். இந்த நிகழ்வின் போது சூரிய ஒளியை பூமி மீது விழ விடாமல் நிலவு மறைத்துக்கொள்ளும். இதன் காரணமாக இருள் சூழும். இதுவே சூரிய கிரகணம் (Solar Eclipse) ஆகும். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகண நிகழ்வானது இன்று நிகழ உள்ளது. இந்த கிரகணமானது அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் தென்படும். மேலும் இந்திய நேரப்படி சூரிய கிரகணம் இன்று இரவு 9.12 மணிக்கு தொடங்குகிறது. அடுத்த நாள் காலை 2.22 மணிக்கும் நிறைவடையும்.

ஆதித்யா எல்1: இந்தியாவின் சோலார் மிஷன் ஆன ஆதித்யா எல்1 விண்கலம் தான் இந்த சூரிய கிரகணத்தை கண்காணிக்க உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பூமியில் இருந்து 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனை ஆய்வு செய்ய 2008 ஜனவரியில் ‘ஆதித்யா–1’ எனும் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் ‘ஆதித்யா எல்–1’ (Aditya L-1 ) ஆக மாற்றம் அடைந்தது. தொடர்ந்து வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் (IIA), வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் பல்கலைக்கழக மையம் (IUCAA), இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் (IISER) ஆகிய மையங்கள் பங்களிப்புடன் ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. Andhra Pradesh Eluru Temple Theft: வடிவேலு ஸ்டைலில் சாமி கும்பிட்டப் படியே ஆத்தாவிடம் ஆட்டையப் போட்ட திருடர்.. வைரலாகும் வீடியோ..!

மேலும் ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியில் சம புவிஈர்ப்பு விசையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சூரியனை பூமி சுற்றும்போது, அதற்கு ஏற்ப சூரியனை ஆதித்யா விண்கலமும் பின் தொடரும். எல்-1 என்பது பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலான ஒரு குறிப்பிட்ட புள்ளியை குறிக்கும் லாக்ரேஞ்ச் பாயிண்ட் என்ற இடமாகும். எல்-1 என்ற இடத்திலிருந்து எவ்வித குறிக்கீடும் இன்றி சூரியனை ஆராய முடியும். மேலும் 5 ஆண்டுகளுக்கு ஆய்வுப்பணிகளை ஆதித்யா மேற்கொள்ள உள்ளது. இன்று குறிப்பாக அவ்விடத்திலிருந்து சூரிய கிரகணத்தை கண்காணிக்க உள்ளது. இது சூரிய ஒளிக்கோளம் (Solar Photosphere) மற்றும் புற ஊதா நிறமாலையின் (Near-ultraviolet spectrum) அருகிலுள்ள குரோமோஸ்பியரின் (Chromosphere) புகைப்படங்களை கைப்பற்றும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.