![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/images/2025/02/meta.jpg?width=380&height=214)
பிப்ரவரி 11, புதுடெல்லி (Technology News): முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா நிறுவனம் (Meta), பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமுக வலைத்தளங்களை இயக்கி வருகிறது. அதிலும், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப் (WhatsApp). இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். Elon Musk: ட்விட்டரைத் தொடர்ந்து.. ஓபன் ஏஐயை வாங்க ஆசைப்படும் எலான் மஸ்க்.!
மெட்டா பணிநீக்கம்:
மெட்டா நிறுவனம் உலகளவில் 3,600க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது, இது அதன் பணியாளர்களில் சுமார் 5% பேரை பாதிக்கிறது. இந்த நடவடிக்கை, ஐரோப்பா, ஆசிய பசிபிக், அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களை வெகுவாக பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. பணித்திறன் சார்ந்த நடவடிக்கையாக, பணியாளர்களை பணி நீக்கம் செய்யவிருக்கிறது.