Elon Musk (Photo Credit: @elonmusk X)

பிப்ரவரி 11, புதுடெல்லி (Technology News): உலகின் முன்னணிப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் தளம் போன்ற நிறுவனங்களை நடத்தி வருகிறார். இதனிடையே 'டிக்டாக்' செயலியை எலான் மஸ்க் வாங்க இருப்பதாகவும், தகவல்கள் வெளியாகின. இவர் ட்ரம்ப் அரசின்கீழ் செயல்படும் DODGE-இன் தலைவராகவும் உள்ளார். இந்த நிலையில், செயற்கை தொழில்நுட்பத் துறையில் ஓபன் ஏஐ நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார். Money: பணத்திற்கும் மகிழ்ச்சிக்கும் உள்ள தொடர்பு.. என்ன தெரியுமா?!

பதிலடி கொடுத்த சாம் ஆல்ட்மேன்:

ஓபன் ஏஐ தலைமை நிர்வாக அதிகாரியாக சாம் ஆல்ட்மேன் உள்ளார். 2015இல் ஓபன் ஏஐ நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர். ஆனால் 2018 கருத்து வேறுபாடு காரணமான அதிலிருந்து வெளியேறினார். இதை தொடர்ந்து சாம் ஆல்ட்மேன் X தளத்தில் எலான் மஸ்க்-ஐ வம்புக்கு இழுக்கும் வகையில், நீங்க வேணும்ன்னா ட்விட்டரை எனக்கு 9.74 பில்லியன் டாலருக்கு கொடுங்க வாங்கிக்கொள்கிறேன் என பதிவிட்டார். இதில் கடுப்பான எலான் மஸ்க், டிவிட்டரிலேயே சாம் ஆல்ட்மேனை மோசடி செய்பவர் என்றும் ஸ்கேம் ஆல்ட்மேன் என்றும் விமர்சனம் செய்தார்.