Lunar Eclipse (Photo Credit: Pixabay)

மார்ச் 25, புதுடெல்லி (New Delhi): சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே பூமி ஒரே நேர் கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் (Lunar Eclipse) ஏற்படுகிறது. இத்தகைய சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. இதுதான் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஆகும். மேலும் இன்று தமிழ் மாதமான பங்குனி உத்திரமும் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்தச் சந்திர கிரகணம் விசேஷமானது. ஏனென்றால் பங்குனி உத்திரத்தில் சந்திர கிரகணம் 100 ஆண்டுகளுக்கு பின் வருகிறது. அதே நேரம் வடமாநிலங்களில் இன்று கோலியும் கொண்டாடப்படுகிறது. இதனால் இன்று வானில் தோன்றும் சந்திர கிரகணம் வழக்கமான சந்திர கிரகண நிகழ்வை விட கூடுதல் சிறப்பு வாய்ந்தது எனக் கருதப்படுகிறது. Genie First Look: அற்புத விளக்கில் இருந்து வரும் ஜெயம் ரவி.. ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

இந்த சந்திர கிரகண நிகழ்வு காலை 10:23 மணிக்குத் தொடங்கி மாலை 4:39 மணிக்கு முடியும். இந்தியாவில் பகல் பொழுது இருப்பதால் இதனை பார்க்க முடியாது. ஆனால் அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், தெற்கு நார்வே மற்றும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் காண முடியும்.