
பிப்ரவரி 19, சென்னை (Technology News): சமூக ஊடகங்களில் இருக்கிறீர்களா அப்போது உங்களுக்கு கமெண்ட் ரீட் பண்ணும் பழக்கம் இருக்குமே? தற்போது இளைஞர்களுக்கு, அவர்களை மீறியும் போஸ்ட்கான கமெண்டுகள் ரீட் பண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் அதிகமாக சமூக வலைதளங்களில் மீம்ஸ், வீடியோக்கள் போன்றவைகளைத் தான் அடிக்ட்டாகி நேரம் போவது தெரியாமால் பாத்துக் கொண்டிருப்போம். ஆனால் இப்போது ஒரு படி மேலே சென்று கமண்ட்களுக்கு யார் என்ன கூறுகிறார்கள், அவர்களின் என்ன நினைக்கிறார்கள் என கருத்துக்களை ரீட் செய்து வருகிறோம். இதனால் முன்பை விட ஒரு போஸ்ட்க்கு செலவிடும் நேரம் அதிகமாகி வருகிறது. கமெண்ட் செய்பவர்களை விட அதை படிப்பவர்கள் எண்ணிக்கை தான் அதிகம். Financial Tips: பொருளாதாரம் உயராமல் இருப்பதற்கான காரணம்.. கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.!
கமெண்ட் ரீட்:
ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதற்கு முன் அதை இதற்கு முன் வாங்கியவர்களுக்கு எப்படி இருக்கிறது என அவர்களின் அனுபவங்களை பார்க்க ஆரம்பித்து யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற அனைத்து இடங்களிலும் மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதை தங்கள் கருத்துக்களும் மக்களின் கருத்துக்களும் ஒன்றாக உள்ளதா என பார்ப்பதில் ஆர்வம் காட்டுகிறோம். இது ஒரு சில இடங்களில் புரணி பேசுவதை போன்று மாறி வருகிறது. யாரென்று தெரியாத இருவர் கமெண்டில் ஏதோ காரணத்திற்காக சண்டையிட்டுக் கொள்கின்றனர். அதை மற்றவர்கள் ரீட் செய்வது நன்பர்களுக்கு சேர் செய்வது என அடுத்தவர்களை பற்றி பேச ஆரம்பிக்கின்றனர். இது பொழுதுபோக்காக இருக்கும் வரை எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படப் போவதில்லை. அதையும் தாண்டி தனது சொந்த வேலைகள், பணி நேரங்களிலும் கமெண்ட்கள் படிக்க ஆரம்பித்துவிட்டு நிறுத்த முடியாமல் செல்வதில் தான் பிரச்சனையே ஏற்படுகிறது. அதிலும் சிலர் இதை உணர்ந்து கமேண்ட் ரீட் செய்வதிலிருந்து மாற இணையத்தில் பல வழிகளைத்தேடி வருகின்றனர். ஆனால் நம்மில் பலருக்கு இது நம்மை அடிமையாக்கி வருகிறது என்று கூட தெரியவில்லை.
ஒருவேளை நீங்களும் கமெண்ட் ரீட் செய்வதிற்கு அடிமையாகி விட்டதாக உணர்ந்தால் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றலாம். ஒரு பதிவிற்கான கமெண்ட்களை படித்து முடித்த பின் அந்த சமூக வலைத்தளத்திலிருந்து வேளியேறி வேறு எதேனும் வேலைகளை செய்யலாம். இது போலவே ஒரு ஒரு முறையும் முயற்சிக்கலம். கமெண்ட்கள் பிரிவை ஓப்பன் செய்யாமலே போஸ்ட்களைப் பார்க்கலாம். கமெண்ட்கள் ஓப்பன் செய்கையிலேயே குறைவாக பார்த்தால் போதும் என்று நினைவில் வைக்க வேண்டும்.