Farmers Shot Dead in Nigeria (Photo Credit: @JacaNews X)

ஜனவரி 14, போர்னோ (World News): நைஜீரியாவின் போர்னோ (Borno) மாநிலத்தில் உள்ள வடகிழக்கு பகுதியில் ஆயுதக் குழுக்களின் தாக்குதலில் 40 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்கா மாகாணத்தில் உள்ள போகோ ஹராம் குழு மற்றும் ஐஎஸ்ஐஎல் துணைப் பிரிவைச் சேர்ந்த போராளிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என போர்னோ மாநில கவர்னர் பாபகானா உமாரா ஜூலும் மற்றும் மாநில தகவல் ஆணையர், உஸ்மான் தார் நேற்று (ஜனவரி 13) தெரிவித்தனர். Forest Fire: கட்டுக்கடங்காத காட்டுத்தீ.. பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை வீடுகளை விட்டு வெளியேறும் சம்பவம்.. விபரம் உள்ளே.!

விவசாயிகள் சுட்டுக்கொலை:

சாட் ஏரியின் கரையில் தும்பாவில் விவசாயிகளை (Farmers) சுற்றி வளைத்து நேற்று முன்தினம் (ஜனவரி 12) மதியம் சுட்டுக் கொன்றதாக தார் கூறினார். இதன் முதற்கட்ட விசாரணையில், சுமார் 40 விவசாயிகள் கொல்லப்பட்டதாகக் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.