மே 03, சென்னை (Technology News): சீன ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் பிராண்ட் மொபைல் விவோ, தற்போது அதன் புதிய வி30e ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இவை வெல்வெட் சிவப்பு மற்றும் பட்டு நீல நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ளது என தெரிவித்துள்ளது. அறிமுகச் சலுகையாக, விவோ வி30e ஸ்மார்ட்போனை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ, ஐடிஎஃப்சி வங்கி கார்டுகள் மூலம் 10% தள்ளுபடியை பெறலாம் எனவும், சில்லறை விற்பனைக் கடைகளில் ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்பவர்களுக்கு எஸ்பிஐ, ஐடிஎஃப்சி, ஐசிஐசிஐ, இண்டஸ்லேண்ட் மற்றும் பிற வங்கி கார்டுகள் மூலம் 10% தள்ளுபடி கிடைக்கின்றது. Benefits Of Ice Apple: செரிமான கோளாறு, அம்மை நோய்களை தடுத்து, உடல் சூட்டை தணிக்கும் நுங்கு..!

விவோ வி30e (Vivo V30e): இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் 3D அமோல்டு (AMOLED) டிஸ்ப்ளே, Qualcomm Snapdragon 6 Gen 1 சிப்செட், 5500mAh பேட்டரி திறன் கொண்ட 44W வயர்டு பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியுடன் உள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அடிப்படையிலான விவோவின் FunTouchOS 14 இயங்குகிறது. மேலும், OIS உடன் 50MP (Sony IMX 882) சென்சார் வசதி கொண்ட பின்புற இரட்டை கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 4K வீடியோ பதிவுக்கான ஆதரவுடன், மற்றொரு 50MP கேமரா வசதியும் உள்ளது.

இரண்டு வண்ணங்களில் வரக்கூடிய 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வசதியுடன் உள்ள ஸ்மார்ட் போன் சுமார் ரூபாய் 27,999-க்கும் மற்றும் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூபாய் 29,999-க்கும் விற்பனைக்கு வரவுள்ளது. வருகின்ற மே மாதம் 9-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும்.