ஜூன் 21 , சிங்கப்பூர் (Technology News): தெற்காசிய நாடுகளில் பிரபலமான இருசக்கர வாகன டாக்சி மற்றும் உணவு டெலிவரி நிறுவன செயலியாக இருப்பது Grab Holdings நிறுவனம். இந்த நிறுவனம் தனது ஊழியர்களில் 1000 பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது.
அதவது, தனது மொத்த பணியாளர்களில் 11% வேலையாட்களை அந்நிறுவனம் நீக்கி இருக்கிறது. அந்நிறுவனத்தின் தலைமை இயக்குனர் ஆண்டனி டன் (Anthony Tan) இதுகுறித்து கூறுகையில், "தொழில் போட்டிக்கு ஏற்ப, வணிக ஸ்திரத்தன்மையை கணக்கில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
மேலும், லாபத்திற்கான குறுக்குவழியாக நாங்கள் இதைச் செய்யவில்லை என்பதை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக, எங்கள் செயல்பாடுகளின் அனைத்துப் பகுதிகளிலும் செலவினங்களை குறைப்பதிலும், இயங்குதளத்தின் செயல்திறனை மேம்படுத்துவதிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
சிங்கப்பூரில் தலைமையிடத்தை கொண்ட க்ராப் நிறுவனத்தில் 9,942 பேர் பணியாற்றி வந்தனர். கடந்த கொரோனா பரவலின் போது 2020-ல் 360 பேர் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 1000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிறுவனம் 2012ல் தொடங்கப்பட்டது.