மார்ச் 20, புதுடெல்லி (New Delhi): நமது வீட்டை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைப்பது ஆரோக்கியமான சூழலை உருவாக்கி கிருமிகள் மற்றும் பாக்டீரியா பரவுவதை தவிர்க்கிறது. ஆனால் ஒவ்வொரு நாளும் உங்கள் வீட்டில் இருக்கும் தூசி மற்றும் அழுக்குகளைச் சுத்தம் செய்வதற்கு நீங்கள் சிரமப்பட்டாள், ஒரு வேக்கம் கிளீனர் (Vacuum cleaner) உங்கள் வேலைகளை எளிதாக்கி உங்களுக்கு உதவ முடியும். தற்போது போஷ் நிறுவனத்தின் போஷ் அன்லிமிடெட் 7 ஹேண்ட்ஸ்டிக் வேக்கம் கிளீனர் (Bosch Unlimited 7 Handstick) இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்: இந்த வேக்கம் கிளீனரில் 66,000 rpm ஐ வழங்கும் TurboSpin மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும், அன்லிமிடெட் 7 பல்வேறு பரப்புகளில் வலுவான உறிஞ்சும் சக்திக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இதிலுள்ள 3.0 Ah பேட்டரி, ஒரு பேட்டரி சார்ஜ் மூலம் வீட்டின் 1000 சதுர அடி வரை சுத்தம் செய்வதற்கான நீட்டிக்கப்பட்ட இயக்க நேரத்தை உறுதி செய்கிறது. இந்த மாடலானது, ஸ்மூத் ஹேண்டிலுக்கு ஏதுவாக லைட்வெயிட் (Lightweight), எர்கோனாமிக் (Ergonomic) டிசைன் கொண்டிருக்கிறது. 99.9 சதவீத டஸ்ட் பிக்கப் எஃபிசியன்சி (Dust Pickup Efficiency) கொண்டுள்ளது. ஆகவே, வெறும் கைகளால் செய்யப்படும் சுத்தத்தைவிட பல மடங்கு சுத்தம் இந்த வேக்கம் கிளீனர் மூலம் கிடைக்கும். Ilaiyaraaja Biopic: இளையராஜா பயோபிக்... இசைஞானியாக அவதரிக்கும் தென்னிந்திய புரூஸ் லீ..!
நைட் டைம் அல்லது வெளிச்சம்படாத இடங்களில் சுத்தம் செய்ய ஏதுவாக எல்இடி லைட்ஸ் (LED Lights) கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆட்டோ மோட் (Auto Mode) சப்போர்ட் உள்ளது. வீடு மட்டுமல்லாமல், சோபா, பீரோ, வார்ட்ரோப் கார்னர்களிலும் சுத்தம் செய்துகொள்ள அதற்கேற்ப கிட்களும் கிடைக்கின்றன. இந்த போஷ் அன்லிமிடெட் 7 வேக்கம் கிளீனரின் விலையானது, ரூ.30,000ஆக இருக்கிறது.