
ஜூன் 06, மும்பை (Technology News): இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நாணயக் கொள்கைக் குழு (MPC) இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, ரெப்போ வட்டி விகிதம் தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுக்கும். ரிசர்வ் வங்கியால், வணிக வங்கிகளுக்கு நிதிக்கான வட்டி அளவு நிர்ணயம் செய்யப்படும். இந்த வட்டி விகித நிர்ணயம்தான், 'ரெப்போ விகிதம்' என்று அழைக்கப்படுகிறது. இதை வைத்துதான் வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கு வட்டியை நிர்ணயம் செய்ய முடியும். விகிதம் உயர்ந்தால் வட்டி உயரும். அதேபோல், கட்ட வேண்டிய தொகை உயரும். ரெப்போ ரேட் (RBI Cuts Repo Rate) உயரும் போதெல்லாம் வட்டி உயர்வதால் இஎம்ஐ கட்ட வேண்டிய காலமும் உயரும். அதன்படி, இந்த 2025ஆம் ஆண்டு பிப்ரவர் 05ஆம் தேதி ரெப்போ வட்டி விகிதம் 6.50% இருந்து 0.25 சரிந்து, 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 09ஆம் தேதி, ரெப்போ வட்டி விகிதம் 6% ஆக இருந்தது. Instagram Update: இன்ஸ்டா பிரியர்களுக்கு உற்சாக செய்தி.. புதிய அப்டேட் வெளியிட்ட இன்ஸ்டாகிராம்.!
ரெப்போ வட்டி விகிதம்:
இந்நிலையில், இன்று (ஜூன் 06) இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 6% இருந்து 5.5% ஆக குறைத்துள்ளது. இதுகுறித்து பேசிய ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா, இந்திய பொருளாதாரம் தற்போது வலுவாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், ரெப்போ வட்டி விகிதம் குறைத்திருப்பது, நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் முக்கிய நடவடிக்கையாக இருக்கும். குறிப்பாக கார், வீடு லோன்களின் EMI குறைய வாய்ப்புள்ளது.