Social Media (Photo Credit : Pixabay)

ஜூன் 05, சென்னை (Technology News): சர்வதேச அளவில் முன்னணி சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் இளம் தலைமுறையிடையே அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்றாக இருக்கிறது. தங்களது புகைப்படத்தை பகிர்வதற்கும், ட்ரெண்டிங்கான வீடியோ எடுப்பதற்கும் என பலரும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இதில் கிடைக்கும் லைக்ஸ் பலரின் உலகமாகவும் இருந்து வருகிறது. இதனால் பயனர்களின் வசதிக்காகவும், பாதுகாப்புக்காகவும் பல்வேறு நடைமுறைகளை இன்ஸ்டாகிராம் செயல்படுத்தி வருகிறது. Realme C71: பட்ஜெட் விலையில் ரியல்மி சி71 அறிமுகம்.. அசத்தலான அம்சங்கள் இதோ..! 

இன்ஸ்டாகிராம் அப்டேட் :

மேலும் அனைவரும் எளிமையான முறையில் அதனை பயன்படுத்தும் பொருட்டு பல அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் 3:4 என்ற அளவில் பதிவேற்றம் செய்யும் வகையில் புதிய அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி புகைப்படத்தை இனி நாம் கிராப் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இந்த நடைமுறைக்கு முன்னதாக 1:1 , 4:5 ,16:9 என்ற ஸ்டாண்டர்ட் வடிவங்கள் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.