Scam Using Sylendra Babu IPS Pic (Photo Credit: @TelanganaDGP X)

ஜூலை 19, சென்னை (Chennai): இணையவழி மோசடிகள் என்பது தொழில்நுட்பத்தின் அறிமுகத்திற்கு பின் கடுமையான அளவு அதிகரித்துவிட்டது. மக்களின் அறியாமை மற்றும் அவர்களின் பயம் உட்பட பல்வேறு காரணங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, சைபர் கிரைம் குற்றவாளிகள் தங்களின் மோசடிகளை தொடருகின்றனர். சமூகத்தில் உயரிய அந்தஸ்தில் இருக்கும் அரசுத்துறை பணியாளர்கள், காவலர்கள், திரைபிரபலங்கள் போன்றோரின் புகைப்படத்தை பயன்படுத்தி போலியான கணக்குகளை தொடங்கியும் பணம் கேட்டு மோசடிகள் நடக்கின்றன.

மோசடி அழைப்பாளர் அதிர்ச்சி பேச்சு:

இந்நிலையில், தமிழ்நாடு காவல்துறை முன்னாள் இயக்குனர் சைலேந்திர பாபு (Sylendra Babu IPS) ஐபிஎஸ் போட்டோவை பயன்படுத்தி வடமாநிலத்தில் மோசடி ஒன்று நடந்துள்ளது. சைலேந்திர பாபுவின் புகைப்படத்தை பயன்படுத்திய கும்பல், பாகிஸ்தான் (+92) அழைப்பு எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு பேசியுள்ளது. மும்பை சேர்ந்த நபரிடம் பேசிய மோசடிப்பேர்வழிகள், "உங்களின் மகன் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். Bomb Threat: சென்னை குளோபல் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்; கடிதத்தில் வந்த பகீர் தகவல்.! 

போட்டோவை ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டல்:

அவரை கைது செய்து நாங்கள் வைத்திருக்கிறோம். பெண் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் குறித்து உங்களின் மகன் மீது வழக்குபதியாமல் இருக்க கூகுள் பே-வில் பணம் அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்ய மறுத்தால், உங்களின் மகன் புகைப்படத்தை ஊடகம் மற்றும் எஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திடுவேன். அவர்கள் செய்தி பதிவிட்டுவிடுவார்கள். உங்களின் குடும்ப மானம் பறிபோய்விடும்" என மிரட்டியுள்ளது.

மோசடியை நம்பி ஏமாறாதீர்கள்:

மோசடி அழைப்பு என்பதை நன்கு உணர்ந்த நபர், தனது மற்றொரு செல்போனில் அவரிடம் பேசியவாறு அனைத்தையும் வீடியோ பதிவு செய்துள்ளார். இவ்வாறான மோசடி அழைப்புகளை பெற்றால், உடனடியாக சைபர் கிரைம் இணையத்தளத்தில், எதிர்முனையில் பேசும் நபரின் அழைப்பு எண்ணை புகாராக அளித்தால், காவல்துறையினர் அந்த அழைப்பு எண்ணை நீக்கி மேற்படி மோசடி நடக்காமல் தடுத்துவிடுவார்கள்.