5G Network | Mobile Phone (Photo Credit: PTI)

மார்ச் 20: விரைவில் பலரும் 5 ஜி சேவையை (5G Network) பயன்படுத்தும் காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால், இன்று வரை 2 ஜி சேவைக்காக அல்லாடிக்கொண்டு இருக்கும் கிராமங்களும் உள்ளன. அவையும் விரைவில் அதிவேக (High Speed Internet) இணைய சேவையை பெறும். இன்று நமது ஸ்மார்ட்போனில் 5G தொலைத்தொடர்பு சேவையை உபயோகம் செய்வது குறித்து தெரிந்துகொள்ளலாம்.

ஆண்ட்ராய்ட் போன் / கூகுள் பிக்சல் (Android & Google Pixel Phone): 5G நெட்ஒர்க் சேவையை இந்த செல்போன்களில் தொடங்குவதற்கு Settings => Network & Internet Option-க்கு செல்ல வேண்டும். பின் Sim Option-ஐ தேர்வு செய்து, விருப்ப Network ஐ 5G ஆக மாற்றி உபயோகம் செய்யலாம். TOPS to fund Neeraj Chopra: ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் பயிற்சி செலவுகளை ஏற்றது மத்திய அரசு.!

சாம்சங் (Samsung Mobile): சாம்சங் நிறுவன ஸ்மார்போன்களில் 5G சேவையை தொடங்குவதற்கு Settings => Option சென்று, Mobile Network ஐ தேர்ந்தெடுத்து 5G LTE அமைப்பை தேர்வு செய்து கொள்ளவும். அப்போது 3G மற்றும் 2G Auto Connect Option-ஐ தேர்வு செய்துகொள்ளவும்

ஒன் பிள்ஸ்: OnePlus செல்போனில் 5G நெட்ஒர்க் சேவையை தொடங்குவதற்கு Settings => சென்று Wifi & Network Option க்குள் செல்லவும். அதில் Sim & Network அமைப்புக்குள் செல்ல வேண்டும். அங்கு Profile Network Type பக்கத்திற்கு சென்று தானியங்கு அமைப்பில் 2G 3G 4G 5G நெட்ஒர்க்-களை தேர்வு செய்யவும்.

ஒப்போ / ரியல்மி (Oppo & Realme): ஒப்போ மற்றும் ரியல்மி நிறுவன செல்போன்களை நீங்கள் பயன்படுத்தி வந்தால் Settings => Link & Share பக்கத்திற்குள் சென்று, Sim 1 & Sim 2 ஆகியவற்றை தனித்தனியே தேர்வு செய்து நெட்ஒர்க்-களை தேர்ந்தெடுத்து 2G முதல் 5G வரை உபயோகம் செய்துகொள்ளலாம்.