
ஜூன் 22, சென்னை (Chennai News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா (Neeya Naana) இன்று 399வது எபிசோட் ஒளிபரப்பு (Neeya Naana Today Episode) செய்யப்பட்டது. இந்த எபிசோட் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இன்றைய காட்சியில் வருமானம் கொண்டு தொழில் தொடங்கும் நபர்கள் சந்தித்த விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக உணவுக்கடை தொழில் என்பது மிகப்பிரபலமாகி இருக்கிறது. அந்த வகையில், உணவுக்கடை தொடங்கி நஷ்டமடைந்தவர்கள் Vs தொழில் முனைவோர் இடையே வாதங்கள் நடைபெற்றது. அப்போது, பலரும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர். அப்படியாக, ஒருவர் பதிவு செய்தது தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி விவாதத்தை உண்டாக்கி இருக்கிறது. Jana Nayagan Glimpse: 'என் நெஞ்சில் குடியிருக்கும்' - இளைய தளபதியின் ஜன நாயகன் கிளிம்பிஸ் வீடியோ.!
கருப்பட்டி காபி முதலீடு (Karupatti Coffee Investment Loss):
அதாவது, சமீபத்தில் கருப்பட்டி கடை என்ற விஷயம் மிகப்பிரபலமானது. பல ஊர்களில் புதிதாக திறக்கப்பட்ட கடை 3 முதல் 5 மாதங்கள் வரை இருந்த நிலையில், பின் இருந்த இடம் தெரியாமல் போனது. இந்த விஷயம் குறித்து பாதிக்கப்பட்ட ஒருவர் பதறவைக்கும் தகவலை தெரிவித்துள்ளார். அதாவது, டீ கடையில் ரூ.1.5 இலட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.1 இலட்சம் வருமானம் பார்க்கலாம் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு ரூ.10 இலட்சம் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. கருப்பட்டி காபியை முழுக்க முழுக்க இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் விளம்பரப்படுத்திய நிலையில், அவர்களுக்கு பணம் கொடுத்ததும் ஏமாற்றம் நடந்துள்ளது. ஒருகட்டத்தில் பல இலட்சங்களை இழந்தவர்கள், சுத்தமாக முடியாது என்ற நிலையில் கடையை மூடிவிட்டு வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தி வருகின்றனர். அதேபோல, அவர்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட உணவு பொருட்களும் தரமாக இல்லை.
கருப்பட்டி 1 ஆண்டு முழுவதும் கிடைக்கும் பொருளா?
உண்மையில் கருப்பட்டி பனை மரத்தின் நீரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. கருப்பு சாறு வைத்து நாட்டு சர்க்கரை, வெல்லம் தயாரிக்கப்படுவதைப்போல, பனை மரத்தின் சாறில் பனை கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது. கடந்த 2010ல் கருப்பட்டி விலை ரூ.10 கிலோவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதன் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் இருந்து மே மாசம் வரை கிடைக்கும் பதநீரில் கருப்பட்டி தயாரிக்கப்படும். 5 லிட்டர் பதநீரில் 2 கிலோ மட்டுமே கருப்பட்டி கிடைக்கும். ஆகையால், கருப்பட்டி காபி என்ற பெயரில் நாட்டு கரும்பு சர்க்கரையுடன் சீனி கலக்கப்பட்டும் மோசடி நடந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து இதுவரை பணத்தை இழந்தவர்கள் தொழில் நஷ்டம் என புகார் அளிக்கவில்லை. உரிய திட்டமிடல் இன்றி மிகப்பெரிய மோசடி இதில் நடந்துள்ளது. கொஞ்சம் பணம், கடன் வாங்கி எப்படியவது முன்னேறிவிடலாம் என நினைத்தவர்கள் சொந்த தொழில் ஆசையில் மோசடி செயலில் சிக்கி தினறி இருப்பது அம்பலமாகியுள்ளது.
கருப்பட்டி காபி கடை முதலீடு மோசடி குறித்து குற்றச்சாட்டு:
கருப்பட்டி ஆரோக்கியம் என்கிற Scam.
ஒன்றை இலட்சம் முதலீடு, ஒரு இலட்சம் இலாபம்னு கருப்பட்டி காஃபி ப்ரான்சைஸ் இன்ஸ்டா இன்ஃபுளூயென்சர்ஸ் மூலம் ஏமாந்து பத்து இலட்சம் நஷ்டம்.
இயற்கை, ஆரோக்கியம் என்கிற பெயரில் விளம்பரம் செய்யும் அனைத்தும் ஏமாற்றுப்பேர்வழிகள். நீங்க கருப்பட்டி காஃபி… pic.twitter.com/mIb6Y4dSNB
— முனைவர். கணேசு ガネス (@DrGanesh_Japan) June 22, 2025
கருப்பட்டி ஆண்டு முழுவதும் கிடைக்காது என வெளிப்படையாக பேசும் கருத்துக்கள்:
கருப்பட்டி கிலோ 10 விற்கும்போது 18ரூபாய் ஆனா 2010ல் 100ல் தொடங்கிய விலை புது கருப்பட்டி 450லும் பழசு 550இல் இருந்து 600 ரூபாயிலும் விற்கிறது. இது நேரடியாக கருப்பட்டி தயாரிக்கும் ஆளிடம் இருந்து பெறப்படும் விலை.(ஆள் தொழிற்சாலை அல்ல) இவ்ளோ விலைக்கு காரணம் பனை மரம் ஏற ஆள் இல்லை.
— அழகானவனின் தகப்பன் (@vanhelsing1313) July 26, 2024