ஏப்ரல் 20, சென்னை (Health Tips): தாவரங்களிலிருந்து நமக்கு காய்கறிகள், பழங்கள், கீரைகள் என பலவகையான முறையில் பயன்கள் கிடைக்கிறது. அந்த வகையில், சிறந்த நல்ல பயன்களை தரக்கூடிய கோவக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். Young Woman Murder: கள்ளகாதலியின் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டிய கள்ளக்காதலன் கொலை., கள்ளக்காதலியும் கத்திக்குத்து தாக்குதலில் பலி.!

கோவக்காயின் மருத்துவ பயன்கள்:

கோவக்காயில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், விட்டமின் பி1 மற்றும் பி2 ஆகியவை உள்ளன. கோவக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு குறையும். இந்த இலைகளை எடுத்து சாறு பிழிந்து அதோடு மிளகுப்பொடி சேர்த்து குடித்து வர சளி மற்றும் இருமல் சரியாகும். இலைகளை அரைத்து புண்கள், கட்டிகள் மீது பூசி வர புண் ஆறிவிடும். தேமல், படை ஆகியவை நீங்க அரை லிட்டர் நல்லெண்ணெயில், கால் லிட்டர் கோவக்காய் இலை சாறை சேர்த்து அதன் மேல் தடவி வர வேண்டும்.

இதனை வற்றலாக பொரித்து சாப்பிட்டால், உடல் சூட்டை தணிக்க உதவும். கோவக்காயை பச்சையாக உண்டு வர வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும். கோவ இலை சாறுகள் விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டவையாகும். இந்த சாறை நெய்யில் சேர்த்து தீக்காயங்கள் மீது பூசி வந்தால், அவை குணமடையும். உணவில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்றவை சரிசெய்து சீராகும். மேலும், இந்த இலையை அரைத்து சொறி சிரங்கு மீது தேய்த்து வந்தால், அதற்கான பலனை அளிக்கும் தன்மை கொண்டதாகும்.