Money (Photo Credit: @bbctamil X)

மே 30, சென்னை (Technology News): ஒவ்வொரு தனிநபரும் தான் சம்பாதிக்கும் பணத்தை சேமிக்கவும், ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானத்தைப் பெறவும், தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதலீடுகளைச் செய்கிறார்கள். அந்தவகையில், வருங்கால வைப்பு நிதி பயன்படுகிறது. வருங்கால வைப்பு நிதி (Provident Fund) என்பது ஒரு வகை சேமிப்புத் திட்டமாகும். இதில், நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் இருவரும் தங்களது சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை ஊழியரின் எதிர்காலத்திற்காக சேமிக்கின்றனர். இது, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) நிர்வகிக்கப்படுகிறது. காலப்போக்கில் வட்டியை அதிகரித்து, குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் பெற்றுக் கொள்ளலாம். JIO Plan: 5ஜி அன்லிமிடெட் டேட்டா.. குறைந்த விலையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்த ஜியோ..!

வருங்கால வைப்பு நிதி (PF) பயன்கள்:

  • பிரவோடென்ட் ஃபண்ட் (PF) என்பது ஒரு முதலீட்டு நிதியாகும். ஊழியர்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை, ஓய்வூதிய நிதிக்கு மாதாந்திர அடிப்படையில் பங்களிக்க முடிகிறது.
  • மாதாந்திர சம்பளத்தில் ஒரு பகுதியை சேமித்து வருவது, பணியில் இருந்து ஓய்வு பெறும்போது அல்லது நிறுவனத்தில் இருந்து வேலையை விட்டு வெளியேறும் போது, மொத்த தொகையாக பெற்றுக் கொள்ளலாம்.
  • மத்திய அரசால் உருவாக்கப்பட்ட மத்திய அறங்காவலர் குழு (CBT), ஊழியர் வருங்கால வைப்பு நிதியை (EPF) நிர்வகிக்கிறது. எதிர்பாராத நிதி நெருக்கடியின் போது, ஒரு அவசர நிதியாக இது செயல்படும்.
  • இது ஊழியர்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது. அதிகளவு பணத்தை முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஊழியரின் சம்பளத்தில் ஒரு பகுதி தொடர்ந்து கழிக்கப்படுகிறது. இதனால், கணிசமான அளவு பணத்தை சேமிக்க முடியும்.
  • வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C, ஒரு ஊழியரின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஒரு ஊழியர் நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு மாறும் போது, தனது வருங்கால வைப்பு நிதியை இன்னொரு முதலாளிக்கு மாற்றிக்கொள்ளலாம்.