WhatsApp File Picture (Photo Credit: Pixabay)

டிசம்பர் 03, சான் பிரான்சிஸ்கோ (Technology News): கடந்த 2009ம் ஆண்டு முதன் முதலாக உலகில் அறிமுகம் செய்யப்பட்ட (WhatsApp), 2014ல் முகநூல் செயலியின் பயன்பாட்டுக்கு பின்னர் பிரபலமானது. அதனைத்தொடர்ந்து, முகநூல் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு, அதன் பயனாளர்கள் இன்டர்நெட் வசதியுடன் தங்களின் கருத்துக்களை நண்பர்களுக்கு பகிரும் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது. பின்னாளில் எழுத்துக்கள், புகைப்படங்கள், விடீயோக்களை பலவகையில் பகிர வாட்சப் பிரதானமாக பயன்படுத்தப்பட்டது.

உலகளவில் பயனாளர்கள்: தனிநபர் தகவல் பாதுகாப்பு அம்சத்தின் கீழ், பல்வேறு புதுப்பிப்புகள் (WhatsApp Update) தொடர்ந்து வாட்சப் நிறுவனத்தால் செய்யப்பட்டு வருகின்றன. இன்றளவில் வாட்சப் செயலியை தினமும், சர்வதேச அளவில் 2.7 பில்லியன் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

புதுப்புது அப்டேட்: சமீபத்தில் எச்.டி தரத்திலும், சாதாரணமாகவும் புகைப்படம் மற்றும் வீடியோ அனுப்புவது, வாட்சப் ஷாட்களை லாக் (WhatsApp Chat Lock) செய்வது, வாட்சப் சேனல்கள் தொடர்பான சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டன. Cyclone Michaung: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நகரத்தொடங்கியது மிக்சாங் புயல்: கடலோர மாவட்டங்கள், சென்னைக்கு உச்சகட்ட அலெர்ட்.!

யூசர்நேம் தெரிந்தால் நண்பர்களை கண்டறியலாம்: இந்நிலையில், பயனர்கள் தங்களது நண்பர்களின் Username-ஐ பயன்படுத்தி, அவர்களை செல்போன் நம்பர் இன்றி தேடிக்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பயனர்களின் தனிநபர் பாதுகாப்பு கேள்விக்குறியாகாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வாட்சப் தெரிவித்துள்ளது.

விரைவில் அறிமுகம்: இதுதொடர்பான வசதியை அறிமுகம் செய்யும் நிகழ்வு விரைவில் நடைபெறும். தற்போது அவை பரிசோதனை அளவில் இருந்து வருகிறது. விரைவில் அது சாத்தியப்படும் எனவும் வாட்சப் தெரிவித்துள்ளது.