Whatsapp File Pic (Photo Credit : Pixabay)

ஆகஸ்ட் 17, சென்னை (Technology News): மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் செயலியின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஏஐ தொழில்நுட்பம் மூலமாக இலக்கண பிழைகளை சரி செய்வது, நாம் கூறும் வார்த்தையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது போன்ற தகவல்களை சரி செய்யும் அப்டேட் கொண்டு வர இருக்கிறது. நாம் அனுப்பும் தகவல்களை சரிபார்க்கவா என்று பயனரிடம் கேட்டு அந்த தகவலை திருத்தம் செய்து கொள்ள அறிமுகப்படுத்தப்பட உள்ளது. BSNL Prepaid Plans: 300 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்கள்.. பிஎஸ்என்எல் அசத்தல் சலுகை..! 

இலக்கணப் பிழைகளை சரி செய்யும் வாட்ஸ்அப் :

இதன் மூலமாக எழுத்துப்பிழை இன்றி வரிகளை நீக்கவும், சொற்றொடர்களை மாற்றவும், இலக்கணப் பிழைகளை சரி செய்யவும் இந்த பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய அம்சங்களின் சோதனை ஆண்ட்ராய்டில் நடைபெற்ற நிலையில், இந்த சேவை விரைவில் வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்த விருப்பம் தெரிவித்து அதனை ஆக்டிவேட் செய்யும் பட்சத்தில் இதனை நாம் பயன்படுத்தலாம்.

ஏஐ தொழில்நுட்பத்துடன் அசத்தல் அப்டேட் :

பயனர்கள் அனுப்ப விரும்பும் செய்தியை எழுதி வார்த்தைகளை மாற்றிக் கொள்ளவும் சிறப்பு ஐகான் வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் இணைக்கப்படும். எழுத்து உதவி ஆண்ட்ராய்டு செயல்களில் தற்போது சோதனை அளவில் இருக்கிறது. விரைவில் அது படிப்படியாக அப்டேட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் நமது அனுமதி இன்றி ஏஐ எந்த தகவல்களையும் மாற்றாது என்பது குறிப்பிடத்தக்கது.