டிசம்பர், 10: இன்றுள்ள தொழில்நுட்ப யுகத்தில் விரைவு என்பது நமக்கு பழகிப்போன ஒன்றாகிவிட்டது. பேருந்தில் பயணம், இரயில் பயணம் என அனைத்திலும் விரைவான சேவையை எதிர்பார்க்கிறோம். அதேபோல, நம்முடன் ஒருசேர கலந்த ஸ்மார்ட்போன்கள் சார்ஜ் ஏற்றும் திறனில் சிறந்தவை எவை? ஒருமணிநேரம் சார்ஜ் (Fast Charging Smartphone) ஏற்றிவிட்டு ஒருநாள் முழுக்க உபயோகம் செய்ய இயலாதா? என்ற கேள்வியுடன் அதனை நாம் கேட்டு வாங்க தொடங்கிவிட்டோம். இன்று விரைந்து சார்ஜ் ஏறும் செல்போன்கள் குறித்த தகவலை காணலாம்.
பேட்டரி சார்ஜிங்கை பொறுத்த வரையில் அது வயர்லெஸ் சார்ஜிங், நீண்ட நேர உழைப்பு, நமது செல்போன் உபயோகம் என பல சாராம்சங்களை பொறுத்து அமைகிறது.
ஒன் பிளஸ் 10 டி 5G (OnePlus 10T 5G): 128 GB, 256 GB ஸ்டோரேஜ், 8GB, 12 GB,16 GB ரேம், 50 MP + 8 MP + 2 MP மூன்று பிரைமரி கேமரா, 16 MP செல்பி கேமரா, 6.7 இன்ச் (1080 x 2400) பிக்சல் டிஸ்பிளே, Li-Ion 4800 mAh பேட்டரி திறனுடன் ரூ.44,999 க்கு சந்தை மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது.
மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா (Motorola Edge 30 Ultra): 128 GB, 256 GB ஸ்டோரேஜ், 8 GB, 12 GB ரேம், 200 MP + 50 MP + 12 MP மூன்று பிரைமரி கேமரா, 60 MP செல்பி கேமரா, 6.67 இன்ச் (1080 x 2400) பிக்சல் டிஸ்பிளே, Li-Ion 4610 mAh பேட்டரி திறனுடன் ரூ.59,999 க்கு சந்தை மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது.
சியோமி 12 ப்ரோ 5G (Xiaomi 12 Pro 5G): 256 GB ஸ்டோரேஜ், 8 GB, 12 GB ரேம், 50 MP + 50 MP + 50 MP மூன்று பிரைமரி கேமரா, 32 MP செல்பி கேமரா, 6.73 இன்ச் (1440 x 3200) பிக்சல் டிஸ்பிளே, Li-Ion 4600 mAh பேட்டரி திறனுடன் ரூ.62,999 க்கு சந்தை மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது.
Xiaomi 12 Pro
ஐக்யூஓஓ 9டி 5G (IQOO 9T 5G): 128 GB, 256 GB ஸ்டோரேஜ், 8 GB, 12 GB ரேம், 50 MP + 13 MP + 12 MP மூன்று பிரைமரி கேமரா, 16 MP செல்பி கேமரா, 6.78 இன்ச் (1080 x 2400) பிக்சல் டிஸ்பிளே, Li-Ion 4700 mAh பேட்டரி திறனுடன் ரூ.49,999 க்கு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. Rajinikanth: உலகளவில் ரசிகர்களை கொண்ட உச்ச நட்சத்திரம்.. யார் இந்த ரஜினிகாந்த்.. வெற்றியின் மருவுருவமாய் சூப்பர்ஸ்டார்.!
விவோ எக்ஸ்80 ப்ரோ 5G (Vivo X80 Pro 5G): 256 GB ஸ்டோரேஜ், 12 GB ரேம், 50 MP + 48 MP + 12 MP + 8 MP பிரைமரி கேமரா, 32 MP செல்பி கேமரா, 6.78 இன்ச் (1440 x 3200) பிக்சல் டிஸ்பிளே, Li-Ion 4700 mAh பேட்டரி திறனுடன் ரூ.79,999 க்கு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. விரைந்து சார்ஜ் ஏறும் போன்களில் விவோ எக்ஸ் 80 ப்ரோ செல்போன் சிறந்தது ஆகும். இது 80W திறன் கொண்டு விரைந்து சார்ஜ் ஏறும் அமைப்பை பெற்றது.
ரியல்மி ஜிடி நியோ 3டி (Realme GT Neo 3T): 128GB, 256GB ஸ்டோரேஜ், 6GB, 8GB ரேம், 64MP + 8MP + 2MP பிரைமரி கேமரா, 16MP செல்பி கேமரா, 6.62 inches (1080 x 2400) பிக்சல் டிஸ்பிளே, Li-Ion 5000 mAh பேட்டரி திறனுடன் ரூ.29,999 க்கு சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
ஐக்யூஓஓ 9 ப்ரோ 5G (IQOO 9 Pro 5G): 256GB ஸ்டோரேஜ், 8GB, 12GB ரேம், 50MP + 50MP + 16MP மூன்று லென்ஸ் பிரைமரி கேமரா, 16MP செல்பி கேமரா, 6.78 இன்ச் (1440 x 3200) பிக்சல் டிஸ்பிளே, Li-Ion 4700 mAh பேட்டரி திறனுடன் ரூ.64,990 க்கு சந்தை மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது.
சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் (Xiaomi 11i HyperCharge): 128GB ஸ்டோரேஜ், 6GB, 8GB ரேம், 108MP + 8MP + 2MP மூன்று பிரைமரி கேமரா, 16MP செல்பி கேமரா, 6.67 இன்ச் (1080 x 2400) பிக்சல் டிஸ்பிளே, Li-Ion 4500mAh பேட்டரி திறனுடன் ரூ.26,999 க்கு சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. 120W திறனுடன் சியோமி 11ஐ சார்ஜ் ஏற்றுவதால் 15 நிமிடத்தில் 100% சார்ஜ் ஏறிவிடும்.
ஒன்பிளஸ் நோர்டு 2டி 5G (OnePlus Nord 2T 5G): 128GB, 256GB ஸ்டோரேஜ், 8GB, 12GB ரேம், 50MP + 8MP + 2MP மூன்று லென்ஸ் பிரைமரி கேமரா, 32MP செல்பி கேமரா, 6.43 இன்ச் (1080 x 2400) பிக்சல் டிஸ்பிளே, Li-Po 4500 mAh பேட்டரி திறனுடன் ரூ.28,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது டுயல்செல் பேட்டரி அமைப்பை கொண்டது என்பதால் 80W சூப்பர்பாஸ்ட் சார்ஜிங் திறனுடன் செயல்பட்டு 1 ல் இருந்து 100 % சார்ஜை 27 நிமிடங்களில் ஏற்றிவிடும்.
ரியல்மி ஜிடி நியோ 3 (Realme GT Neo 3): 128GB, 256GB ஸ்டோரேஜ், 8GB, 12GB ரேம், 50MP + 8MP + 2MP பிரைமரி கேமரா, 16MP செல்பி கேமரா, 6.7 இன்ச் (1080 x 2412) பிக்சல் டிஸ்பிளே, Li-Ion 5000 mAh பேட்டரி திறனுடன் ரூ.36,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரியல்மி ஜிடி நியோ 3 மாடல் செல்போன் சார்ஜர் உலகிலேயே முதன் முதலில் 150W சார்ஜ் ஏற்றும் திறனுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இது 5 நிமிடத்திற்குள் 50 % சார்ஜ் ஏற்றும் திறன் கொண்டது. அதேபோல 15 நிமிடத்திற்குள் 100%சார்ஜ் ஏறிவிடும்.