அக்டோபர் 26, கலிபோர்னியா (Technology News): சர்வதேச அளவில் முகநூல், வாட்சப் போன்ற செயலிகளுக்கு ஈடாக, அதிக பயனர்களை கொண்ட ட்விட்டர் நிறுவனத்தை உலக செல்வந்தர்களுள் ஒருவரான, ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற பல நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் வாங்கினார்.
ட்விட்டரை வாங்கிய கையோடு பல நிர்வாக மற்றும் தொழில்நுட்ப குழுவில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்த எலான் மஸ்க், ட்விட்டரில் முக்கியஸ்தர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த புளூட்டிக் வசதியை பணத்திற்கு வழங்கி அறிவித்தார்.
ட்விட்டரின் பெயரையும் எக்ஸ் (X) என பெயர்மாற்றி, தனது அமைப்பின் கீழ் கொண்டு வந்தவர் தற்போது அச்செய்லியின் பயனர்களுக்கு பல்வேறு சிறப்பம்சங்களை பணம் கொடுப்போருக்கு வழங்கி வருகிறார். அதன்படி, தற்போது வரை நேரடி மெசேஜ், அதிக எழுத்துக்களை பதிவிடுதல் உட்பட பல அம்சங்கள் வழங்கப்பட்டன. Para Athlete 100m: 100 மீட்டர் அளவிலான பாரா தடகளப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றது இந்தியா..!
இந்நிலையில், எக்ஸ் தளத்தில் வீடியோ மற்றும் ஆடியோ கால் அழைப்புகளை மேற்கொள்ள தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அவை நிறைவுபெற்று பயனர்களுக்கு அச்சேவை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு பயனர்கள் தங்களின் அமைப்பில் சென்று Go to Settings > Privacy & Safety > Direct Messages > Enable Audio & Video Calling வீடியோ கால் வசதியை செயல்பட அனுமதி வழங்கினால், பயனர்கள் தங்களின் செல்போனில் ஆடியோ மற்றும் வீடியோ கால் அழைப்புகளை பெறலாம்.
இந்த சேவை கட்டணம் செலுத்திய பயனருக்கா? அனைவருக்கும் பொதுவானதா? என்ற விபரம் உறுதி செய்யப்படவில்லை. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Early version of video & audio calling on 𝕏 https://t.co/aFI3VujLMh
— Elon Musk (@elonmusk) October 25, 2023