Army Plane Crash in Sudan (Photo Credit: @mog_russEN X)

பிப்ரவரி 26, கார்ட்டூம் (World News): வட ஆப்பிரிக்க நாடான சூடானில் இராணுவ விமானம் (Plane Crash) விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். நேற்று (பிப்ரவரி 25) இரவு கார்ட்டூமுக்கு அருகிலுள்ள வாடி சீட்னா விமானத் தளத்திலிருந்து ஒரு இராணுவ விமானம் புறப்பட்டது. ஆனால், ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்த விமானம், திடீரென விபத்துக்குள்ளானது. Child Abuse Case: 30 ஆண்டுகளில் 300 குழந்தைகளை சீரழித்த மருத்துவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

விமான விபத்தில் 10 பேர் பலி:

விபத்தில் ராணுவ அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதுகுறித்து, தகவலறிந்த அதிகாரிகள் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விமானம் தீப்பிடித்ததும் தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை எடுத்தனர். விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வீடியோ இதோ: