
மே 13, புதுடெல்லி (New Delhi): ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்க இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வந்த போர் காரணமாக இருநாடுகளின் எல்லைப்பகுதியிலும் பதற்றம் நிலவி வந்தது. இதில் 100 க்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தனர்.
போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை :
இதனை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான எல்லைதாண்டிய தாக்குதல் மற்றும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் சுமூக முடிவுக்கு பின் போர் நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் மீண்டும் தாக்குதல் நடந்தால் பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா அறிவித்து இருக்கிறது. Africa Floods: ஆப்பிரிக்காவில் கனமழை; வெள்ளத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலி..!
டொனால்ட் ட்ரம்ப் கருத்து :
இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து பேசிய அமெரிக்க அதிபர், "இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம். இது நிரந்தரமான போர் நிறுத்தமாக இருக்கும். இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த அணு ஆயுதப் போரை அமெரிக்கா நிறுத்தவில்லை என்றால் பல லட்சம் மக்கள் உயிரிழந்திருக்க கூடும். போரை நிறுத்தவில்லை எனில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என்று தெரிவித்ததால் தான் மோதலை நிறுத்தினர்" என கூறினார்.
வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விளக்கம் :
இதற்கு அதிகாரப்பூர்வமாக இந்தியா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடங்கியதில் இருந்து இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது உரையாடல் நடந்தது. ஆனால் அவற்றில் வர்த்தகம் தொடர்பான எந்த விதமான பேச்சும் எழவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.