River Flood in Pakistan (Photo Credit: @khanRiyadh X)

ஜூன் 27, இஸ்லாமாபாத் (World News): பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதி சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். அந்தவகையில், ஸ்வாட் ஆறு அருகே உள்ள சியால்கோட் பகுதியைச் சேர்ந்த 18 பேர் கொண்ட குடும்பத்தினர் சுற்றுலாவுக்கு வந்துள்ளனர். அப்போது, ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு (Flood) ஏற்பட்டுள்ளது. தேர்வு எழுதிக்கொண்டிருந்த 29 மாணவர்கள் துடிதுடித்து பலி.. டிரான்ஸ்பார்மர் வெடித்து சோகம்.!

7 பேர் பலி:

இதில், 18 பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களில் 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வீடியோ இதோ: