Released Fishermen's (Photo Credit: @ANI X)

நவம்பர் 11, அட்டாரி-வாகா (Attari - Waha Border): மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள், அரபிக்கடலில் மீன்பிடிக்கும்போது, சில நேரங்களில் எல்லைதாண்டி வந்து மீன் பிடித்ததாக பாகிஸ்தானிய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து வந்தன.

மத்திய அரசு பாக். சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை சட்டரீதியாக மீட்க முயற்சிகள் மேற்கொண்டு வந்தன. இந்நிலையில், பாகிஸ்தானில் வெளிநாட்டு கைதிகளை, அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடுகடத்தும் நடைமுறை தொடங்கியது.

அதாவது, கொலை-கொள்ளை போன்ற குற்றங்கள் இல்லாமல், எல்லைதாண்டி வந்து கைதாகிய பிற நாட்டவரை, அவர்களின் நாட்டிற்கே அனுப்பி வைக்கும் முடிவுக்கு பாகிஸ்தானிய அரசு வந்தது. இதன்பேரில், இந்தியர்கள் 80 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். Apartment Fire Accident: அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து; 95 வயது மூதாட்டி பரிதாப பலி.! 

எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பாகிஸ்தானில் உள்ள மலிர் சிறையில் (Malir Jail) அடைக்கப்பட்டனர். தற்போது, அங்கிருந்து அல்லாமா இக்பால் (Allama Iqbal Express) விரைவு இரயில் அனைவரும் அழைத்துவரப்பட்டு, பின் அட்டாரி-வாகா எல்லையில் இந்திய இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பல மாதங்களாகவும், ஆண்டுகளாகவும் பாகிஸ்தானிய சிறையில் வாடிய மீனவர்கள், தாயகம் திரும்பி தங்களின் குடும்பத்தினரை விரைவில் சந்திக்கவுள்ளனர். இதனால் மீனவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏழைகளான மீனவர்கள் இரயிலில் பலத்த பாதுகாப்புடன் எல்லைக்கு கொண்டு வரப்பட்டு இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.