Sahara Floods 2024 (Photo Credit: @Ravi4Bharat X)

அக்டோபர் 13, அல்ஜியர்ஸ் (World News): ஆப்ரிக்காவில் உள்ள சஹாரா (Sahara Desert) பாலைவனம், உலகளவில் சூடான மிகப்பெரிய நீண்ட பாலைவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 4800 கிமீ நீளமும், 3800 கிமீ அகலமும் என 9.2 கோடி சதுர கி.மீ பரப்பளவு கொண்ட பாலைவனம் இது ஆகும். மத்திய தரைக்கடலின் வளமிக்க பகுதி, அட்லாஸ் மலைகள், எகிப்தின் நைல் பள்ளத்தாக்கு ஆகியவற்றைத் தவிர்த்து, வடக்கு ஆப்ரிக்காவின் பெரும்பாலான நிலப்பரப்பு சஹாரா பாலைவனத்தால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் (Global Warming):

அல்ஜீரியா, சாட், எகிப்து, லிபியா, மாலி, நைஜர், மயூரிட்டனா, மேற்கு சஹாரா, சூடான், தெற்கு மொராக்கோ, துனிசியா ஆகிய நாடுகளை உள்ளடக்கி சஹாரா பாலைவனம் இருக்கிறது. கோடை காலங்களில் 46 டிகிரி வரை உச்சபட்ச வெப்பநிலையை எதிர்கொள்ளும் சஹாராவில், மழை என்பது அரிதினும் அரிதான நிகழ்வாகவே கருதப்படுகிறது. ஆனால், இயற்கையை பொறுத்தவரையில் ஒவ்வொரு 26 முதல் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் தன்மையுடன் இருக்கிறது. வானிலை மாற்றம், எல் நினோ விளைவு, பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் என சஹாராவும் பல துயரங்களை வானிலை ரீதியாக எதிர்கொண்டது. Middle East Conflict: பேஜர்கள் உட்பட மின்னணு சாதனைகளுக்கு விமான பயணத்தில் தடை; ஈரான் அரசு உத்தரவு.! 

50 ஆண்டுகளுக்கு பின் பெருமழை (Sahara Floods 2024) வெள்ளம்:

பருவநிலை மாற்றத்தை உலக நாடுகளே எதிர்கொண்டு இருக்கும் நிலையில், சஹாராவில் 50 ஆண்டுகளில் இல்லாத பேய் மழை சில நாட்களில் கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள பல நகரங்களில் வெள்ளம் புகுந்து கரைபுரண்டு ஓடும் நிலையில், பாலைவனப்பகுதிகளில் நீர் தேங்கி மக்கள் நீச்சலடித்து மகிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை அங்குள்ள மக்கள் கொண்டாடினாலும், இயற்கை தன்னை நிலைநிறுத்திக்கொள்வதையே இந்நிகழ்வு உணர்த்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மாற்றம் ஒன்றே மாறாதது:

சுமார் 20 - 25 ஆயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட மிகப்பெரிய சாம்ராஜ்யங்களை கண்ட நிலப்பரப்புகளில், ஆப்பிரிக்காவின் சஹாராவுக்கு மிகப்பெரிய இடமும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை பொறுத்தவரையில் ஒவ்வொரு 25 - 30 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நதிகளில் வெள்ளம் என்பது சென்றுவிடும். அவை இயற்கையாகவே நடக்கும் மாறுதல்களில் ஒன்றாக கவனிக்கப்படுகிறது.

50 ஆண்டுகளில் இல்லாத மழைபொழிவால் வெள்ளத்தால் நிரம்பியுள்ள பாலைவனப்பகுதிகள்:

வெள்ளத்தையே பார்த்திடாத சஹாரா பாலைவன நகரங்களையும் நீரினால் மூழ்கடித்த வெள்ளத்தின் காட்சிகள்: