அக்டோபர் 15, காபூல் (World News): ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் (Afghanistan Earthquake) காரணமாக 1000 பேர் பலியாகினர், 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்து இருந்தனர்.
கடந்த சில நாட்களாகவே வெவ்வேறு தருணங்களில் அங்கு நில அதிர்வு உணரப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அமெரிக்க நிலவியல் துறை ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஹேரத் (Herat) மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதனால் உயிர்சேதம் ஏற்பட்டது குறித்து தகவல் இல்லை.
முந்தைய நிலநடுக்கத்திலேயே பல மக்கள் உயிரிழந்து, கட்டிடங்கள் இடிந்து முகாம்களுக்கு தங்கும் நிலைக்கு வந்துவிட்டனர். தற்போதைய நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானின் மூன்றாவது பெரிய நகராக கருதப்படும் ஹேரத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நகரம் ஈரானின் எல்லையில் இருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் சனிக்கிழமை ஹேரத் மாகாணத்தில் உள்ள ஜின்டாஜன் (Zindajan) நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. Minor Girl Rape: 4 வயதுடைய சிறுமி பாலியல் பலாத்காரம்; மிட்டாய் தருவதாக தனியே அழைத்துச்சென்று கொடூரம்.!
துருக்கி - சிரியா எல்லையில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தை கணித்த ஆய்வாளர், அடுத்தபடியாக இந்தியா - ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தானை மையமாக கொண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் என முன்னதாகவே எச்சரிக்கை விடுத்தது இருந்தார்.
இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானை கடந்த சில வாரமாகவே அடுத்தடுத்த பெரும் நிலநடுக்கங்கள் கடுமையாக உலுக்கி வருகிறது. உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு 2021க்கு பின் தலிபான் ஆட்சி காரணமாக பொருளாதார பிரச்சனை, உணவின்மை, பட்டினி சாவு போன்றவை தொடருகிறது.
இந்தியா மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை உட்பட உணவு பொருட்களை தொடர்ந்து விநியோகம் செய்து வருகிறது. இவ்வாறான சூழல்களுக்கு மத்தியில் இயற்கை பேரிடரும் ஆப்கானிஸ்தானை பதம்பார்க்கிறது.