பிப்ரவரி 03, அபுதாபி: ஏர் இந்திய (Air India Express) நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் ரக விமானம் B737-800 ரக IX 348 விமானம், இன்று அபுதாபியில் இருந்து கேரளா (Kerala) மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு (Abu Dhabi to Calicut) நகருக்கு புறப்பட்டது. விமானம் அபுதாபி விமான நிலையத்தில் மேலும்பி 1000 அடி உயரத்தை சென்றடைந்தபோது, எதிர்பாராத விதமாக விமானத்தின் ஒன்றாம் எண் எஞ்சினில் (Flame On Flight Engine) தீப்பற்றியுள்ளது. இதனையடுத்து, விமான கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட விமானிகள், விமானத்தை அவசர கதியில் (Emergency Landing) தரையிறக்க அனுமதி வாங்கி தரையிறங்கினர். விமான குழுவினர் மற்றும் பயணிகளுக்கு எவ்வித அபாயமும் இல்லை. அனைவரும் பத்திரமாக இருக்கின்றனர். இந்த தகவலை ஏர் இந்திய நிறுவனம் மற்றும் மத்திய வான்வழி போக்குவரத்து துறை உறுதி செய்துள்ளது. Minister PTR Palanivel Thiagarajan: அரசு திட்டங்களுக்கு நான் நிதி கொடுப்பதில்லை என கூறுகிறார்கள் – அமைச்சர் பி.டி.ஆர் வேதனை.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)