ஏப்ரல் 28, பென்சில்வேனியா (World News): இந்தியாவில் பெரும்பான்மை மக்களாக வாழும் இந்துக்களுக்கு பல்வேறு பண்டிகைகள் கொண்டாட இருக்கின்றன. இவற்றில் முக்கியமானது தீப ஒளித்திருநாள் (Deepawali Festival). தீப ஒளித்திருநாளுக்கு என பல்வேறு புராணங்கள், காலம் காலமாக கடந்து வந்த செய்திகள் இருக்கின்றன.
இன்றளவில் மக்கள் தீப ஒளித் திருநாளில் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியாக சிறப்பிப்பார்கள். காலத்தின் மாற்றத்திற்கேற்ப பட்டாசுகள் வருகை அதிகரித்து, அன்றைய நாளில் பட்டாசுகள் வெடித்து மகிழுவார்கள். இவை இந்தியாவில் வாழும் மக்கள் மட்டுமின்றி வெளிநாடு வாழ் இந்துக்களாலும் சிறப்பிக்கப்படும். Mobile Bacteria: பொது கழிவறையை விட ஆபத்தான வைரஸ்களை கொண்டிருக்கும் செல்போன்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
காலத்தின் மாற்றத்தால் தற்போது தீப ஒளித்திருநாள் அனைவருக்குமான இனிமை புகுத்தும் திருநாளாக மாறி வருகிறது. கடந்த ஆண்டு தீப ஒளித்திருநாளின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden), வெள்ளை மாளிகையில் (White House) வைத்து சிறப்பித்து மகிழ்ந்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் இருக்கும் பென்சில்வேனியா (Pennsylvania) மாகாணம் ஆண்டுதோறும் தீப ஒளித்திருநாளுக்கு பொது விடுமுறை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கான சட்ட முன்வடிவு செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பென்சில்வேனியா மாகாணத்தில் அதிகளவில் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.