Smartphone | IWC Toilet (Photo Credit: Pixabay / Wikipedia Commons)

ஏப்ரல் 28, புதுடெல்லி (Health Tips): அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் செல்போன் (Smartphone) முக்கியமான, தவிர்க்க இயலாத இடத்தை பெற்றுவிட்டது. ஏனெனில் ஒருவரிடம் பேசுவதற்கும், நாம் பயணம் (Travel) செய்யும் தொலைவை தெரிந்துகொள்வதற்கும், நேரத்தை பொழுதுபோக்குக்காக செலவிடவும் அவை உதவுகின்றன.

இவ்வாறான செல்போன்களை நாம் எந்த நேரமும் கைகளால் உபயோகம் செய்துவிட்டு, அழைப்பு வந்தால் அதனை காதுகளில் வைத்து பேசி மீண்டும் அதனை அப்படியே உபயோகம் செய்வோம். எந்த நேரமும் செல்போனும் கையுமாக இன்றளவில் பலரும் உலா வருகிறார்கள்.

இவ்வாறானவர்கள் கழிவறை (Toilet) செல்லும் போது கூட தங்களுடன் செல்போனை எடுத்து செல்கின்றனர். பின்னர், அதனை கைகளால் உபயோகம் செய்துவிட்டு, அவசரத்தில் தனது சட்டை அல்லது கால்சட்டை பையில் இருந்து பணத்தை எடுக்க வாயால் செல்போனையும் சிலர் கவ்விக்கொள்வார்கள்.

Smartphone (Photo Credit: Pixabay)

நம்மிடையே அட்டை புழுக்களை போல தொற்றிக்கொண்ட இவ்வகை பழக்கங்கள் உடலுக்கு மிகவும் கேடான உபாதைகளை தரக்கூடியவை. ஏனெனில் நாம் உலாவும் உலகில் பாக்டீரியாக்களின் ஆதிக்கம் இருப்பது நமக்கு நன்கு அறிந்த ஒன்றே.

நாம் அன்றாடம் உபயோகம் செய்யும் செல்போனை சுத்தம் செய்யாமல் இருப்பதால், அதன் மேல் கிருமிகள் (Bacteria) தங்கும் ஆபத்து அதிகம். இதுகுறித்து தோல் மருத்துவர் மமினா துரெக்னோ (Dr. Mamina Turegano) என்பவர் ஆய்வு மேற்கொண்டு, செல்போன்களில் உள்ள கிருமி தாக்கம் பொது கழிவறையை விட அதிகம் என கூறியுள்ளார்.

சுத்தமில்லாத செல்போனை நாம் உபயோகம் செய்துவிட்டு, பேசும் போது முகத்தில் வைத்தால் சருமத்தின் வழியே பாக்டீரியா ஊடுருவும் என்றும் மருத்துவர் எச்சரிக்கிறார். நமது செல்போனை 70% கிருமி நாசினி கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.