Heat Temperature (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 06, ரியோ டி ஜெனிரோ (World News): உலகளவில் பெட்ரோல், நிலக்கரி, இயற்கை எரிவாயு, கார்பன் டை ஆக்ஸைடு போன்றவற்றை உபயோகம், உலகை வெப்பமயமாக்கி வருகிறது. இதனைத்தவிர்த்து புதைபடிவ எரிபொருள், மனித செயல்பாடுகள் சர்வதேச அளவிலான வெப்பமயத்தால் விளைவை நவம்பர் 2022 முதல் அக்.2023 வரை கடுமையான அளவு அதிகரித்துள்ளது.

காலநிலை மாற்றம்:

கடந்த ஆண்டில் உலகளவில் உள்ள 90% மக்கள் 10 நாட்கள் கடுமையான வெப்பத்தை தாங்கவேண்டிய சூழ்நிலை அதிகரித்தது. இவை காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட விளைவுகள் ஆகும். நாம் இன்றளவும் இயற்கை எரிவாயு, எண்ணெய் போன்றவற்றை எரித்து வருகிறோம். நடப்பு ஆண்டுகளின் தரவுகளின்படி, அவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட அதிக வெப்பம் அபாயகரமான மழைபொழிவைத்தூண்டி, வெப்பமான வளிமண்டத்தை நீராவியால் நிரப்பி ஆப்ரிக்காவில் மோசமான புயலை உருவாக்கியது. இதனால் கிரீஸ், பல்கெரியா, துருக்கி நாடுகள் பாதிப்படைந்தன. Donald Trump: திருநங்கைகள் இனி மகளிர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தடை.. அதிபர் ட்ரம்பின் அறிவிப்பு..!

பிரேசில் வெப்ப அலை (Brazil Heat wave):

இந்நிலையில் பிரேசிலில் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருவதால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் அதிகபட்ச டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. எதிர்வரும் நாட்களிலும் இதே நிலை காணப்படும் என்பதால் பொதுமக்கள் தேவையில்லாமல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுட்டெரிக்கும் வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளையும் அதிகாரிகள் வெளியிட்டனர்.