நவம்பர் 09, சென்னை (Health Tips): உலகளவில் இரத்த அழுத்தம் என்பது பரவலாக ஏற்படும் நோய்களில் ஒன்றாகிவிட்டது. இளம் தலைமுறை முதல் வயதான நபர்கள் வரை பலருக்கும் இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 1.28 பில்லியன் நபர்கள் இரத்த அழுத்த பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இரத்த அழுத்தம்போல, கண்களில் ஏற்படும் அழுத்தம் தொடர்பான பிரச்சனை க்ளாக்கோமா என்று அழைக்கப்படுகிறது. கண்களின் முன்பகுதியில் ஆக்குவஸ் ஹியூமர் திரவம் சுற்றிவரும். இது அளவுக்கதிகமாக உற்பத்தியாகி, வெளியேறாமல் இருக்கும் பட்சத்தில் கண்களில் அழுத்தம் அதிகமாகும். இதனால் பார்வை நரம்புகள் வெகுவாக பாதிக்கப்படும்.
எந்த வயதை சார்ந்தவர்களுக்கும் ஏற்படும் பிரச்சனையாக உள்ள கண்கள் அழுத்த பிரச்சனை, பிறந்த குழந்தைக்கும் வரும். இதனால் பாதிக்கும் குழந்தைகளின் கண்கள் முதலில் அழகாக இருக்கும். பின் கண்கள் பெரிதாகி, கருவிழி நீலநிறமாகி வெண்ணிறத்தில் மாறும். கண்ணீர் வெளியேறிக்கொண்டே இருக்கும். NZ Vs SL: பெங்களூரில் சொதப்பிய இலங்கை.. வச்சி செய்த நியூசிலாந்து; அபார வெற்றி..!
கண்களில் அழுத்தம் ஏற்படுவதற்கு கணினி மற்றும் ஸ்மார்ட்போன் போன்றவை மட்டும் காரணம் கிடையாது. இவை கண்களில் நீர் அழுத்த நோய் என்று மருத்துவ ரீதியாக கூறப்படுகிறது. இரத்த அழுத்தத்திற்கும், இந்நோய்க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
பரம்பரையாக, உயர் கிட்டப்பார்வை, கண்களில் அடிபடுதல், நீரிழிவு நோய், ஸ்டெராய்த்து மருந்துகள் அதிகளவில் எடுத்துக்கொள்ளுதல், கண்ணீர் பாதை குறுகி காணப்படுதல் போன்றவையால் கண்களில் அழுத்த பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் கண்களில் எந்த பிரச்சனையாக இருந்தாலும், தாமதம் இன்றி மருத்துவரை நாடுவது சாலச்சிறந்தது.