Hindu American Summit 2023 (Photo Credit: ANI)

ஜூன் 15, வாஷிங்க்டன் (Washington DC): கடந்த 2020 தரவுகளின்படி உலகளவில் இந்து மதத்தை பின்பற்றும் மக்கள் 1.2 பில்லியன் பேர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 1.1 பில்லியன் மக்கள் இந்தியாவிலேயே வாழுகின்றனர். எஞ்சியுள்ள 100 மில்லியன் மக்கள் இந்தியாவுக்கு வெளியே (வெளிநாடுகளில்) வசித்து வருகிறார்கள்.

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்திய அரசு பல்வேறு நட்பு நாடுகளில் தனது தூதரகத்தை அமைத்து, அங்குள்ள ஒவ்வொரு இந்தியருக்கு உதவி செய்கிறது. அதேபோல, தாய்நாட்டினை விட்டு வேறொரு நாட்டிற்கு சென்றாலும், நமது கலாச்சாரம் மற்றும் பண்பாடும் ஒருங்கே பயணிக்கிறது.

சிலர் அதனை காலப்போக்கில் கைவிட்டு, தனக்கு அமையும் துணையை பொறுத்து நிலைமையை மாற்றிக்கொள்வார்கள். வெகுசிலர் எங்கு சென்றாலும் அவர்கள் பின்பற்றும் மாண்பை விட்டுக்கொடுக்கமாட்டார்கள். இந்த நிலையில், அமெரிக்காவில் முதல் முறையாக இந்து-அமெரிக்கர்கள் (Hindu-American Summit 2023) உச்சி மாநாடு நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவில் உள்ள இந்துக்களை ஒன்றிணைத்து நடைபெற்ற இந்த மாநாட்டில், பல துறைகளை சேர்ந்தோரும் கலந்துகொண்டனர். இதுகுறித்து American4Hindus அமைப்பின் தலைவர் டாக்டர் ரொமேஷ் ஜப்ரா பேசுகையில் (Dr Romesh Japra), "அரசியல் ஈடுபடுக்காக நாங்கள் முதல் உச்சி மாநாடு நடத்துகிறோம்.

பல துறைகளில் நாங்கள் திறம்பட பணிகளை செய்து வந்தாலும், அரசியல் ரீதியாக பின்தங்கி இருக்கிறோம். இந்து-அமெரிக்கர்கள் மீது பாகுபாடு காண்பிக்கப்படுகிறது. அதனாலேயே அனைவரையும் ஒன்றிணைக்க திட்டமிட்டு, அதனை நடத்தி இருக்கிறோம்" என கூறினார்.