
மார்ச் 22, கொல்கத்தா (Technology News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், முதல் ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையே இன்று (22 மார்ச் 2025), கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்குகிறது. ஐபிஎல் 2025 போட்டியின் முதல் ஆட்டம் (IPL 2025 First Match), கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில், கோலாகலமான கொண்டாட்டத்துடன் ஆட்டம் இன்று இரவு 07:30 மணியளவில் தொடங்குகிறது. இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். Solo Leveling 2 Episode 12: எக்சேஞ்... தவம் கிடைக்கும் அனிமி ரசிகர்கள்.. சோலோ லெவலிங் எபிசோட் 12: ரிலீஸ் எப்போது? விபரம் உள்ளே.!
கூகிள் டூடுல் வெளியீடு:
இன்றைய ஐபிஎல் 2025 போட்டிகளை சிறப்பிக்கும் வகையில், கூகுள் நிறுவனமும் தனது பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கிறது. கூகுள் நிறுவனம் இன்று கிரிக்கெட் தொடர்பான டூடுலை பதிவு செய்து, ஐபிஎல் 2025 போட்டிக்கான ஆதரவை தெரிவித்துள்ளது. இன்று இந்தியாவில் இருந்து கூகுளை பயன்படுத்தும் பயனர்களுக்கு கூகுள் டூடுல் வெளிப்படும். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.